For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ 1 லட்சம் கோடி செலவில் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் விரைவில் தொடக்கம்: நிதின் கட்காரி உறுதி

Google Oneindia Tamil News

நாக்பூர்: கங்கை நதியை ரூ.1 லட்சம் கோடி செலவில் சுத்தப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து, தற்போது பிரதமராக பதவியில் இருக்கும் மோடி, முன்னதாக கங்கை அழைத்ததாலேயே அங்கு வந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், தான் வெற்றி பெற்ற பிறகு மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் நடவடிக்கை மேர்கொள்ளப்படும் என அவர் உறுதியும் அளித்திருந்தார்.

அதன்படி, தான் பிரதமராக பதவியேற்றதும், தனது அரசில் ‘கங்கை சுத்திகரிப்பு' என்ற பெயரில் தனி இலாகாவை ஏற்படுத்தி, அதை நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டு துறை அமைச்சர் உமா பாரதியிடம் ஒப்படைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சியில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், நீர்வளத்துறை அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய 4 அமைச்சகங்கள் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு சென்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம், கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் அளித்த பதில்:

ரூ 1 லட்சம் கோடி செலவு...

ரூ 1 லட்சம் கோடி செலவு...

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு ரூ.1 லட்சம் கோடி வரை வரை செலவாகும். இந்த திட்டம் இன்னும் 4 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

தனி விதர்பா மாநில கோரிக்கை...

தனி விதர்பா மாநில கோரிக்கை...

தனி விதர்பா மாநில கோரிக்கை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவை. மேலும் கட்சிகளிடம் ஒரு மித்த கருத்து ஏற்படவேண்டும் என்றுக் கூறினார்.தனி விதர்பா மாநில கோரிக்கை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவை. மேலும் கட்சிகளிடம் ஒரு மித்த கருத்து ஏற்படவேண்டும் என்றுக் கூறினார்.

மாநில அரசியலுக்கு திரும்ப மாட்டேன்...

மாநில அரசியலுக்கு திரும்ப மாட்டேன்...

அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், மாநில அரசியலுக்கு திரும்புவீர்களா? என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு; ‘‘இனி மாநில அரசியலுக்கு திரும்பமாட்டேன்'' என்று கட்காரி திட்டவட்டமாக பதிலளித்தார்.

விஞ்ஞானிகள் உதவியுடன்...

விஞ்ஞானிகள் உதவியுடன்...

இதற்கிடையே, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி நேற்று ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கங்கை உள்ளிட்ட நதிகளை சுத்தப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ரூர்க்கி, கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் உள்ளிட்ட நிபுணர்களின் உதவியுடன் கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான திட்டத்தை அரசு வகுக்கும்' என்றார்.

பாதுகாப்பது அவசியம்..

பாதுகாப்பது அவசியம்..

இந்நிலையில் சுற்றுச்சூழல் விஞ்ஞானியும், தேசிய கங்கை நதி பாசன குழுமத்தின் உறுப்பினருமான பி.டி.திரிபாதி நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில், ‘கங்கையை சுத்தப்படுத்துவதை விட அதை பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே கங்கை பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க வேண்டும். கங்கையில் நீர்வரத்து குறைந்து விட்டது, நதியின் நீர் கொள்ளளவும் குறைந்ததோடு, மாசடைந்தும் விட்டது என அவர் வருத்தம் தெரிவித்தார்.

English summary
Union Road Transport, Highways and Shipping Minister Nitin Gadkari on Sunday ruled out the possibility of his return to Maharashtra politics in the wake of sudden demise of Union Rural development Minister Gopinath Munde.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X