For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு வருகை தந்த 6வது அமெரிக்க அதிபர் ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா வருகை புரிந்த 6வது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 முறை இந்தியா வந்துள்ள ஒரே அமெரிக்க அதிபரும் ஒபாமா தான்.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று காலை டெல்லி வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மிஷலும் வந்துள்ளார். ஒபாமாவின் வருகையையொட்டி டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள 6வது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

எய்சன்ஹோவர்

எய்சன்ஹோவர்

1959ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் டிவைட் எய்சென்ஹோவர் இந்தியா வந்தார். இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை எய்சன்ஹோவர் பெற்றார். அவர் இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

நிக்ஸன்

நிக்ஸன்

எய்சென்ஹோவர் வந்து 10 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த அமெரிக்க அதிபர் நிக்சன். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று 6 மாதங்கள் கழித்து 1969ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்தார் ரிச்சர்ட் நிக்சன். ஒரு நாள் பயணமாக அவர் இந்தியா வந்தார்.

ஜிம்மி கார்டர்

ஜிம்மி கார்டர்

நிக்ஸன் வந்து 9 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர். 1978ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜிம்மி கார்டர் தனது மனைவி ரோசலினுடன் இந்தியா வந்தார். அவர் தனது தாய் லிலியன் கார்டி இந்தியாவில் பணியாற்றியபோது தங்கியிருந்த ஹரியானா மாநிலத்தில் உள்ள தவ்லத்பூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார். மேலும் தொலைக்காட்சி என்றால் என்னவென்று அறியாத அந்த கிராமத்திற்கு தொலைக்காட்சி பெட்டியை கார்டர் பரிசளித்தார். அவரது வருகைக்ககு பிறகு அந்த கிராமத்தின் பெயர் கார்டர்புரி என்று மாற்றப்பட்டது.

பில் கிளிண்டன்

பில் கிளிண்டன்

22 ஆண்டுகள் கழித்து 2000ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தனது மகள் செல்சியுடன் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். இந்தியா வந்த நான்காவது அமெரிக்க அதிபர் கிளிண்டன். இந்தியாவில் அதிகபட்சமாக 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் கிளிண்டன் தான்.

புஷ்

புஷ்

கிளிண்டன் வந்து 6 ஆண்டுகள் கழித்து 2006ம் ஆண்டு மார்ச் மாதம் தனது மனைவி லாராவுடன் இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 60 மணிநேரம் இந்தியாவில் இருந்தார் புஷ். அப்போது தான் அமெரிக்கா- இந்தியா இடையே வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

நிக்ஸனும், ஒபாமாவும்

நிக்ஸனும், ஒபாமாவும்

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தார். பிற அமெரிக்க அதிபர்கள் இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்ற பிறகு இந்தியா வந்தனர். ஆனால், நிக்ஸனும், ஒபாமாவும் மட்டுமே முதல் முறையாக அதிபர் பதவியேற்றதும் இந்தியா வந்வர்கள். தற்போது ஒபாமா இரண்டாவது முறையாக இன்று இந்தியா வந்துள்ளார். இரண்டு முறை இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Obama is the sixth US president who has visited India and the first one to visit the largest democratic nation in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X