For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறவாத மனிதநேயம்! முதியவரை 2 கிமீ சுமந்து மருத்துவமனையில் அனுமதித்த வீரர்கள்! ஒடிசாவில் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவரை கட்டிலில் வைத்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு மாவட்ட தன்னார்வ படை வீரர்கள் சுமந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் தற்போது அவர் நலமாக உள்ளார்.

ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இங்கு மாவட்ட தன்னார்வ படை (District Voluntary Force) உள்ளது.

 அனலடிக்கும் அக்னி நட்சத்திரத்திற்கு இதமாக அடித்து ஊற்றப்போகும் கனமழை - 5 நாட்களுக்கு ஜில் அனலடிக்கும் அக்னி நட்சத்திரத்திற்கு இதமாக அடித்து ஊற்றப்போகும் கனமழை - 5 நாட்களுக்கு ஜில்

ஒடிசா போலீஸ் துறையில் சிறப்பு பிரிவாக டிவிஎப் எனும் மாவட்ட தன்னார்வ படை செயல்பட்டு வருகிறது. இந்த படை 2009ல் உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

மாவோயிஸ்ட் எதிர்ப்பு பணி

மாவோயிஸ்ட் எதிர்ப்பு பணி

இவர்கள் துப்பாக்கி பயிற்சி பெற்று மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவோயிஸ்டுகளால் ஏற்படும் பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் பிரசாரம் செய்வதையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஒடிசா மாநிலம் மாலன்கிரி மாவட்டத்தில் மாவட்ட தன்னார்வலர் படை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர். மாலன்கிரி மாவட்டம் மாதிலி பிளாக்கில் உள்ள காமர்பள்ளி கிராமத்தில் அவர்கள் விழிப்புணர்வு பணியை மேற்கொண்டனர்.

 முதியவர் அவதி

முதியவர் அவதி

அப்போது அபு படியாமி என்ற முதியவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதை அவர்கள் அறிந்தனர். அவருக்கு மருத்துவ வசதிகள் தேவை இருந்தாலும் 2 கிலோமீட்டருக்கு அப்பால் மருத்துவமனை உள்ளதால் அவரால் செல்ல முடியவில்லை என்பதை அறிந்தனர். இதனால் முதியவருக்கு உதவி செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

2 கிலோமீட்டர் சுமந்தனர்

2 கிலோமீட்டர் சுமந்தனர்

இதையடுது்து முதியவரான அபு படியாமியை கட்டிலில் படுக்க செய்தனர். அவர் கட்டிலில் படுத்து இருக்க மாவட்ட தன்னார்வ படையினர் கட்டிலை சுமந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெயின் ரோட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர், நர்ஸ் சிகிச்சை அளித்தனர். அங்கு அவர் நலமாக உள்ளார்.

பாராட்டு

பாராட்டு

இதற்கிடையே மாவட்ட தன்னார்வ படையினரின் மனிதாபிமான செயல் தொடர்பான படங்கள் இணையதளத்தில் தற்போது தீயாக பரவுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

English summary
In a noble gesture, District Voluntary Force (DVF) Jawans in Odisha's Malangiri carried an ailing elderly man on a cot for around two kilometres to reach the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X