லாரி கவிழ்ந்து சாலையில் ஓடிய எண்ணெய்.. மும்பை-புனே நெடுஞ்சாலையில் கடும் டிராபிக் ஜாம்
புனே: எண்ணெய்லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, மும்பை-புனே எக்ஸ்பிரஸ் ஹை-வே சாலையில் பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தின் இரு பெரும் நகரங்களான மும்பை-புனே நடுவே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று வார இறுதி நாள் என்பதால் பலரும் இந்த சாலை வழியாக வாகனங்களில் பயணிப்பது வழக்கம்.
Plz avoid Pune Mumbai travel on Expressway..Huge traffic jam .. pic.twitter.com/6pcwZtX1S6
— PankajaGopinathMunde (@Pankajamunde) February 20, 2016
இந்நிலையில், கண்டாலா பகுதியில் இன்று காலை எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரியொன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனால் சாலையெங்கும் எண்ணெய் பெருக்கெடுத்து ஓடியது. தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் வாகனங்கள் எதுவும் அந்த வழியாக போக முடியவில்லை.
இதனால் பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு பழைய ஹைவே பாதையை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த பாதை ஒட்டுமொத்த வாகனங்களையும் தாங்க முடியாமல் நெரிசலில் சிக்க ஆரம்பித்தது. இருப்பினும் மெதுவாக ஊர்ந்து செல்ல முடிந்தன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications