"அந்தரங்க உறுப்பை".. நடுரோட்டில் புரண்டு கதறிய பெண்.. ஈவிரக்கமற்ற ஜென்மங்கள்.. ஈரக்குலையே நடுங்குது
இளம்பெண்ணை நடுரோட்டில் கட்டி வைத்து தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது
கான்பூர்: ஒரு பெண்ணை நடுரோட்டில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. அந்த பெண் தன் உயிரை காப்பாற்றி கொள்ள, மண்ணில் புரண்டு புரண்டு தவிக்கிறார்.. இந்த வீடியோ காட்சியை காண்போர் இதயமே சுக்குநூறாக நொறுங்கி போய் வருகிறது.. என்ன நடந்தது?
பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், ஒரு முன்னேறிய தேசமாக கருதப்படும்.. எந்த ஒரு மனிதனுக்கும் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயம் எழுச்சி பெற்றுவிடும்..!
ஆனால், வடமாநிலங்களில் அப்படி ஒரு நிலைமை இதுவரை இல்லை.. பெரும்பாலான மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுகிறது.. மறக்கடிக்கப்படுகிறது.. மறைக்கப்படுகிறது..!

மூடநம்பிக்கைகள்
அதற்கு பதிலாக, மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கும் தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்துதான், மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.. அந்தந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுத்தாலும், அதற்கு ஆளும் தரப்புகள் சரியான தீர்வை அணுகாமலேயே உள்ளன..

ஆண் வாரிசு
அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. ஆண் வாரிசு மீதான மோகமும், அதையொட்டி நடக்கும் குற்ற சம்பவங்களும், நம் தமிழ்நாட்டில்தான் உள்ளது என்று பார்த்தால், வடமாநிலமும் நம்மை போலவே உள்ளது.. ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பரிதாப பெண்.. பெயர் குஸ்மா.. இவரது கணவர் பெயர் நீரஜ் ப்ரஜாப்தி.. கல்யாணம் ஆகி 10 வருடமாகிறது.. இந்த தம்பதிக்கு ப்ரான்ஷி என்ற 7 வயதிலும், ஆர்த்தி என்ற 2 வயதிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆண் குழந்தை
முதல் குழந்தையே ஆணாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர் நீரஜ்ஜூம், அவரது பெற்றோரும்.. ஆனால், பெண்ணாக பிறந்துவிட்டதால், அடுத்த குழந்தை ஆணாக பிறக்கும் என்று நம்பினார்கள்.. 2 வருடத்துக்கு முன்பு பிறந்த குழந்தையும் பெண்ணாகவே பிறந்துவிட்டதால், நீரஜ் குடும்பத்தினரின் மொத்த கோபமும் குஸ்மா மீது திரும்பியது.. ஆண் குழந்தையை ஏன் பெற்று தரவில்லை? என்று கேட்டு அடித்து தாக்கி உள்ளனர்.. அதைவிட உச்சக்கட்டமாக, அப்போதும் ஆத்திரம் தீராமல், குஸ்மாவின் அந்தரங்க உறுப்புகளை மிக கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள் குடும்பத்தினர்.

பெண் குழந்தைகள்
அதுமட்டுமல்ல, அந்த 2 பெண் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.. படிப்பு செலவுக்கும் பணம் தராமல் நிறுத்திவிட்டார் நீரஜ்.. ஆனாலும், குழந்தைகளின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக, குஸ்மா வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைக்கிறார்.. அவர்களுக்கு தந்தை மூலம் எந்த வகையான ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண் குழந்தைகளை கவனமாக பாதுகாத்தும் வருகிறார்.

குஸ்மா
இப்படிப்பட்ட சூழலில்தான், மறுபடியும் நீரஜ் குடும்பம் வேலையை காட்டியது.. சம்பவத்தன்று, நீரஜ், அவரது பெற்றோர், அவரது சகோதரர் என எல்லாரும் ஒன்றாக சேர்ந்து மறுபடியும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.. நடுரோட்டில் குஸ்மாவை கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.. பெரிய பெரிய கற்களை கொண்டு தாக்கி உள்ளனர்.. கீழே கிடந்த தடித்த குச்சிகளை வைத்து அடித்திருக்கிறார்கள்.. இதனால் நிலைக்குலைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார் குஸ்மா..

நடுரோட்டில் கொடூரம்
மகளை நடுரோட்டில் வைத்து அடிக்கிறார்கள் என்ற தகவல் பறந்ததும், குஸ்மாவின் அப்பா கதறிக் கொண்டே ஓடிவந்தார்.. குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த மகளை, தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.. அங்கே தீவிர சிகிச்சை நடந்தது.. இந்த தகவல் கிடைத்ததும், கொட்வாலி போலீசாரும் மருத்துவமனைக்கு சென்று, குஸ்மாவிடம் விசாரணை நடத்தினர்.. ஒன்று விடாமல் நடந்த கொடுமைகளை சொல்லிவிட்டார் குஸ்மா..

எப்ஐஆர்
இப்போது, நீரஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட 5 மீது கொலை வெறி தாக்குதல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. அத்துடன் எப்ஐஆரும் உடனடியாக பதிவு செய்துள்ளனர்... உரிய நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று என மஹோபா மாவட்ட எஸ்பி உறுதி தந்துள்ளார். இதனிடையே, குஸ்மாவை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.. பொதுவாக, நம் நாட்டில் பெண் குழந்தைகளை பாதுகாக்க சட்டங்கள் பல நடைமுறையில் இருக்கத்தான் செய்கின்றன.. எனினும், குற்றங்கள் குறையாமல் உள்ளதால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற தேவை வலிய எழுந்துள்ளது..!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications