தலைவலியா, பணிச்சுமையா, பி.பி எகிறுதா? ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுங்க, ஆனந்தமா வாழுங்க!
டெல்லி: ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால், பணியாற்றும்போது ஏற்படும் மன உளைச்சல் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு மாற்றாக ஆன்லைன் ஷாப்பிங் விளங்குவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நெருக்கமானவருடன் முத்தமிடல், கட்டியணைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன், ஆன்லைன் ஷாப்பிங்கை முடிக்கும்போதும் சுரப்பதாக கூறி சுவாரசியப்படுத்துகிறது அந்த ஆய்வு.

பெருநகரங்கள்
சென்னை, பெங்களூர், மும்பை, புனே, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றில் ஆன்லைன் நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களிடம் ஆய்வு நடத்தி இந்த உண்மையை கண்டறிந்துள்ளது.

பணிச்சுமை
பணியால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதாக 45 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சர்வேயின் மூலம் இந்த உண்மையை அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ரத்த அழுத்தம்
உலக அளவில் 40 சதவீதம் பேர் இதேபோன்ற கருத்தை கூறியுள்ளனர். இந்தியாவில் நகர்ப்புறங்களில் சுமார் 40 சதவீதத்தினரும், கிராமப்புறங்களில் சுமார் 20 சதவீதத்தினரும், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது.

முத்தமிடுவதற்கு சமம்
இதுபோன்ற டென்ஷனை குறைக்க ஆன்லைன் ஷாப்பிங் உதவுகிறதாம். நெருக்கமானவரை முத்தமிடும்போது, கட்டியணைக்கும்போது சுரக்கும் ஹார்மோன்கள், ஆன்லைன் ஷாப்பிங்கை வெற்றிகரமாக முடிக்கும்போதும் ஏற்படுகிறதாம். இதுதான் டென்ஷனை குறைக்கும் காரணமாம்.












Click it and Unblock the Notifications