அமித் ஷாவை சமாளிக்க பிரியங்காவால் மட்டுமே முடியும்: ராகுலிடம் சொன்ன தொண்டர்கள்
லக்னோ: பாஜக தலைவர் அமித் ஷாவை சமாளிக்க பிரியங்கா காந்தி வாத்ராவால் தான் முடியும். அதனால் அவருக்கு கட்சி பொறுப்பளிக்க வேண்டும் என உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் நடந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து பிரியங்கா காந்தி வாத்ராவை கட்சியின் துணை தலைவர் ஆக்குமாறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரே பரேலிக்கு சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்கள் ராகுலிடம் கூறுகையில்,
ராகுல் அண்ணா, அமித் ஷாவுக்கு பிரியங்காவால் தான் தக்க பதிலடி கொடுக்க முடியும். அதனால் அவருக்கு கட்சியின் துணை தலைவர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்றனர்.
இதை கேட்ட ராகுல் பதில் தெரிவிக்காமல் சிரித்தபடி சென்றுவிட்டார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் வரும்போதே பிரியங்கா தனது திறமையான பேச்சால் மக்களை கவர்ந்துவிடுகிறார். இந்நிலையில் அவர் கட்சி பொறுப்பேற்றால் காங்கிரஸுக்கு நல்லது நடக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications