எல்லாமே நிர்வாணம்!.. இந்திய ராணுவ அதிகாரியை நிர்வாணத்தால் வீ்ழ்த்திய பாகிஸ்தான் 'ஸ்பை'!
ஹைதராபாத்: முழுக்க முழுக்க ஆபாசத்தை வைத்து இந்திய ராணுவ அதிகாரியை வீ்ழ்த்தியுள்ளார் அனுஷ்கா அகர்வால் என்ற பெயரில் பத்தான் குமார் போடரை வீ்ழ்த்தியுள்ளார் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி.
இந்தப் பெயரும், அவரது அடையாளமும் போலியானது என்பதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதேசமயம், பத்தான் குமாரை மிகத் திட்டமிட்டு அழகாக ஏமாற்றி தனக்குத் தேவையான பல முக்கியத் தகவல்களை அப்படியே லட்டு போல பெற்றுள்ளார் இந்த உளவாளி.
இதற்கு அந்த உளவாளி பயன்படுத்திய ஆயுதம் செக்ஸ். முழுக்க முழுக்க நிர்வாணத்தை வைத்து பத்தான் குமாரை வீழ்த்தியுள்ளார்.

40 வயது பத்தான்
40 வயதான பத்தான் குமார் போடர், செகந்தராபாத்தில் உள்ள ராணுவத்தின் இஎம்இ பிரிவில் நாயக் சுபேதாராக இருந்து வந்தவர். இவர்தான் தற்போது ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளிக்குக் கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பணம் - நிர்வாணம்
இவரை மயக்கி தனக்குத் தேவையானதை எல்லாம் அந்த பாகிஸ்தான் பெண் உளவாளி மிக அழகாக கறந்துள்ளார். இதற்காக அவர் தனது கவர்ச்சியைப் பயன்படுத்தியுள்ளார். பணத்தையும் கொடுத்துள்ளார்.

நிர்வாண 'சாட்'..
இவர்கள் இருவரும் மணிக் கணக்கில் சேட் செய்துள்ளனர். வீடியோ சாட்டிங்கில் இவர்கள் ஈடுபடும்போதெல்லாம் அந்த பாகிஸ்தான் உளவாளி நிர்வாணமாகத்தான் இருப்பாராம். பேச்சிலும் கூட ஆபாசமும், செக்ஸும் நிரம்பியிருக்குமாம்.

குளியல் காட்சிகள்
அதேபோல பலமுறை தனது குளியல் காட்சிகளையும் வீடியோவில் பத்தான் குமாருக்கு இந்த உளவாளி அனுப்பி வைத்துள்ளார்.

எம்.எஸ்.சி மாணவி போல நடித்து
தான் ஜான்சியைச் சேர்ந்தவர் என்றும் எம்எஸ்சி படித்து வருவதாகவும் கூறி அவர் பத்தான் குமாரை வீழ்த்தியுள்ளார். ஐ.நா. தொண்டு நிறுவன அமைப்பில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

லண்டன் போகலாம்
மேலும் தனது சொந்தச் செலவில் பத்தான் குமாரை லண்டனுக்குக் கூட்டிச் செல்வதாகவும் கூட அவர் உறுதியளித்துள்ளார்.

மாதம் ரூ. 10,000 பணத்துக்கு
மேலும் தான் பணியாற்றும் என்ஜிஓ அமைப்பு இந்திய ராணுவம் குறித்த ஆன்லைன் சர்வே நடத்துவதாகவும், அதில் இணைந்து பணியாற்றினால் மாதம் ரூ. 10,000 தருவார்கள் என்றும் கூறி நைஸாக பத்தான் குமாரை வலையில் வீ்ழ்த்தியுள்ளார். ராணுவ ரகசியங்களையும் பெற்றுள்ளார்.

மேற்கு வங்க வங்கிக் கணக்கில் பணம்
மேலும் கடந்த ஜூலை மாதம் மேற்கு வங்க மாநிலம் மால்டாவின், மங்கல்பாரி ஸ்டேட் வங்கி கிளையில் பத்தான் குமார் பெயரில் ரூ. 9000 பணத்தையும் அவர் டெபாசிட் செய்துள்ளார்.

50 தொலைபேசி எண்களைக் கொடுத்தார்
தனது வலையில் பத்தான் குமாரை வலுவாக வீழ்த்திய பின்னர் ஆன்லைன் சர்வே என்ற பெயரில் பத்தான் குமாரிடமிருந்து 50க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ அலுவலகங்களின் தொலைபேசி எண்களை அவர் பெற்றுள்ளார்.

போலி இமெயில் முகவரி
மேலும் பத்தான் குமாருக்கு போலியான இமெயில் முகவரியையும் இவரே உருவாக்கி கொடுத்துள்ளார். அதில் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 20,000 பணத்தையும் டெபாசிட் செய்துள்ளார்.

ஏவுகணை பிரிவை படம் எடுக்க முயன்ற பத்தான்
இந்த பெண் உளவாளியின் உத்தரவின் பேரில் ராணுவத்தின் ஏவுகணைப் பிரிவை படம் எடுத்து அனுப்பவும் திட்டமிட்டிருந்தார் பத்தான். ஆனால் அது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இவரால் அதைச் செய்ய முடியவில்லை.

"அனுஷ்கா" கொடுத்த பணத்தில் செகன்ட் ஹேன்ட் லேப்டாப்!
மேலும் பாகிஸ்தான் உளவாளி கொடுத்த பணத்தை வைத்து ஒரு செகன்ட் ஹேண்ட் லேப்டாப்பையும் வாங்கியுள்ளார் பத்தான். அதிலிருந்துதான் இந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.

2013 நவம்பரில் ரூ. 15,000
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ. 15,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பதில் 12 ராணுவப் பிரிவுகள் குறித்த தகவலை அந்த உளவாளிக்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த பிரிவுகள் எங்கே நிறுத்தப்பட்டுள்ளன. யாரெல்லாம் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள் என விரிவாக அனுப்பியுள்ளார்.

2 தவணைகளாக ரூ. 30,000
இந்த ஆண்டு மட்டும் 2 தவணைகளாக ரூ. 30,000 பணத்தைப் பெற்றுள்ளார் பத்தான் குமார். இந்த அற்பக் காசுக்காக பல அதி முக்கியமான ராணுவத் தகவல்களை அந்த உளவாளிக்குப் போட்டுக் கொடுத்துள்ளார் பத்தான் குமார்.

முதலில் படம்.. பின்னர் வீடியோ
ஆரம்பத்தில் பத்தன் குமாரைக் கவருவதற்கும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் தனது ஆபாசமான நிர்வாணப் படங்களை மெயில் மூலம் அனுப்பி வைத்தாராம் அந்தப் பாகிஸ்தான் பெண். அதில் மயங்கியதும், நிர்வாண வீடியோக்களையும் அனுப்பி வைத்துள்ளார். அவரை முழுமையாக நம்ப வைத்து காரியம் சாதித்துள்ளார். அதேபோல சாட் செய்யும்போதெல்லாம் நிர்வாண கோலத்தில்தான் சாட் செய்வாராம்.

போலி அனுஷ்கா
ஆனால் உளவுப் பிரிவு விசாரணையில் அனுஷ்கா அகர்வால் என்பது போலியான பெயர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் அனுப்பிய புகைப்படங்கள், வீடியோக்களில் இருப்பதும் உண்மையான பாகிஸ்தான் உளவாளி என்றும் ராணுவம் நம்புகிறது. இந்தப் பெண்ணை ஏவி பின்னால் இருந்து ஐஎஸ்ஐ இயங்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

வாய்ப் மூலம்
அனுஷ்காவும், பத்தான் குமாரும் தொடர்பு கொண்டதெல்லாம் Voice-over-internet protocol எனப்படும் VoIP மூலம்தான். எனவே உரியவரை கண்டுபிடிப்பது கஷ்டமாகியுள்ளது.

10 சிம் கார்டுகள்
பத்தான் குமாரிடமிருந்து 10 சிம் கார்டுகள், 3 டேட்டா கார்டுகள், 3 செல்போன்கள், ஒரு பென் டிரைவ், ஒரு கார்ட் ரீடர், 2 கம்ப்யூட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது இதை உளவுத்துறையினர் குடைந்து கொண்டிருக்கின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications