குடியரசுத் தலைவர் தேர்தல்: கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்.. தம்பிதுரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் தம்பிதுரை எம்பி நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று நேரில் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து தம்பிதுரை எம்பி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.

Party chief will take the decision on the presidential election : Thambidurai MP

மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் தம்பிதுரை கூறினார். கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்று கூறிய தம்பிதுரை இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார் என்றார். இந்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு திரும்பிய அவர் கட்சி தலைமைதான் இதுகுறித்து முடிவு செய்யும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MP Thambidurai says that Party cheif will take the decision on the presidential election. The Edappadi govt will complete 5 years he said.
Please Wait while comments are loading...