For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூசாரியா போனாலும் பத்மநாபசுவாமி கோவில் பூசாரியாக போகணும்… சம்பளம் ரூ.5 லட்சம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Pay Padmanabhaswamy temple priests Rs 5 lakh per month, Amicus tells SC
டெல்லி: பத்மநாபசுவாமி கோவில் நம்பூதிரிகளுக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் வழங்கவேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்பிரமணியம் பரிந்துரை செய்துள்ளார்.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சொத்து விவரங்கள் மற்றும் கோயில் நிர்வாகம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சொத்து விவரங்கள் மற்றும் கோயில் நிர்வாகம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

அவர் கோயிலில் 35 நாட்கள் நேரடியாக ஆய்வு நடத்தி, கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

கோவிலில் உள்ள தந்திரிகள், நம்பூதிரிகள் பற்றி தனது அறிக்கையில் கூறியுள்ள சுப்ரமணியன் அவர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் அடங்கிய கோவிலில் தலைமை தந்திரிக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்பிகளுக்கு வெறும் 12,500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மாதம் ரூ.80000 வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். சிறிய நம்பிகளுக்கு மாதம் ரூ.60000 சம்பளமாக அளிக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

நம்பூதிரிகள், நம்பிகளுடைய வீடுகள் இடிபாடுகளுடன் காணப்படுகிறது. அவர்களின் வீடுகளை சீரமைத்து அவர்களுக்கு இரண்டு பணியாட்களை நியமிக்கவேண்டும் என்றும் கோபால் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

பலகோடி ரூபாய் சொத்துக்கள் அடங்கிய கோவிலை பராமரிக்கும் நம்பூதிரிகள், தந்திரிகள், நம்பிகளுக்கு சரியான பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐஐடியிலயும், ஐஐஎம்லயும் படிச்சவங்கதான் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவாங்களா என்ன, பத்மநாபசுவாமி கோவில் நம்பூதிரியும் கூட லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்ல.

English summary
The best graduates from IITs and IIMs dream of the salary amicus curiae Gopal Subramaniam has recommended for head priests of Sree Padmanabhaswamy temple in Thiruvananthapuram. 
 
 In his report to the Supreme Court on management of the temple, which shot into the limelight after wealth estimated at Rs 1 lakh crore was discovered, Subramaniam listed the hierarchy of priests with thantris at the top followed by periyanambi, panchakavyathunambi, thakkadam and thiruvambadi nambis. He said the thantris should be paid Rs 5 lakh per month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X