For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்.15 முதல் பெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து, நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல் விலை குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

Petrol Prices Likely to be Cut After State Elections

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அதற்கேற்ப இந்திய சந்தையில் பெட்ரோல் விலையைக் குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் வரியுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறையக்கூடும் என்று அறிவித்துள்ளது.

English summary
Petrol prices is likely to be cut by Rs. 1 per litre is in offing as international oil rates fell to a 27-month low.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X