மன்மோகன் அரசியல்வாதியே அல்ல.. கூட்டணி அரசியலே தெரியாதவர்: தாக்குகிறார் மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால்!!
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அண்மையில்தான் இரண்டு புத்தகங்கள் வெளியாகின. இந்த நிலையில் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வாலும் அவரை மிகக் கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது:

பிதமர் மன்மோகன்சிங் எப்போது ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டது இல்லை. அவரைப் பொறுத்தவரை கூட்டணி அரசியலைப் பற்றிய புரிதல் இல்லை. அதில் சிக்கல்களை உள்வாங்கத் தெரியவில்லை.
அவர் எப்போதும் ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டது இல்லை. அவர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டவரும் கிடையாது. அவரை திடீரென பிரதமராக்கிவிட்டனர். அவரைப் பொறுத்தவரையில் முதல் 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2வது பதவிக் காலம் என்பது கூட்டணி அரசு என்பதை அறிவோம். ஒரு கூட்டணி அரசை நடத்துவது என்பது மிகவும் கடினமானது. அவர் ஒரு அரசியல்வாதியாக இல்லாதபோது அதற்கான விலையையும் அவர் கொடுத்தாக வேண்டியதுதான்.
மன்மோகன்சிங்கைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி தெரியாதவர்.
இவ்வாறு போட்டுத் தாக்கியிருக்கிறார் ஜெய்ஸ்வால்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications