தாமரை.. சின்னத்தை மட்டும் பாருங்க! வேட்பாளரை பற்றி கவலைப்படாதீங்க.. இமாச்சலில் பிரதமர் மோடி சுளீர்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, "பாஜக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்காதீர்கள். தாமரை சின்னத்தில் மட்டும் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கெனவே மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் இதே ஆட்சியை தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பரப்புரை
எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நடாளுமன்ற தேர்தலை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் பாஜக இந்த சட்டப் பேரவை தேர்தலில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார்.

தாமரை
அப்போது அவர் பேசியதாவது, "மக்கள் வேட்பாளர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தாமரை சின்னத்தை பார்த்தவுடன் வாக்களித்தால் போதுமானது. நான் தாமரை சின்னம் சார்பாக இங்கு வந்துள்ளேன். பாஜக மத்தியில் இருந்தால் மட்டும் போதுமா? மாநிலத்திலும் இருக்க வேண்டாமா? எனவே தாமரைக்கு நீங்கள் செலுத்தும் வாக்கு நேரடியாக எனக்கு வாக்களிப்பதை போன்றதாகும். இந்த வாக்குகள் எனது கணக்கில் வந்து சேரும். ஆனால் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் இம்மாநிலத்திற்கு என்ன செய்தது?

துரோகம்
அவர்கள் சிறிய மாநிலங்கள் அமைதியாக இருப்பதை விரும்பவில்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தை பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மட்டுமல்லாது, மாநிலங்களின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் தொடர்ந்து பணியாற்றி வந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் என்றால் உறுதியற்ற தன்மை, காங்கிரஸ் என்றால் ஊழல், காங்கிரஸ் என்றால் சுயநலம், காங்கிரஸ் என்றால் குடும்ப அரசியல். வாக்களித்தவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்யாமல் துரோகம் செய்த வரலாறு காங்கிரஸ் அரசுக்கு உண்டு.

ஆம் ஆத்மி
இது ஒருபுறம் எனில் மற்றொருபுறம் ஆம் ஆத்மி, அவர்கள் ரூ.100 அளவில் உதவி செய்கிறார்கள் எனில் அதனை ரூ.1,000 அளவில் விளம்பரம் செய்வார்கள். இவர்களுக்கு மாற்று பாஜகதான். இரண்டை என்ஜின் அரசாங்கம்தான் மாநிலத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்லும். உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த அரசாங்கம் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால் மற்ற மாநில அரசுகள் இவ்வாறு இயங்கவில்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்தும் ஒருமுறை ஆட்சி செய்துவிட்டு வெளியேறிவிடுவோம் என்று என்னுகிறார்கள். ஆனால் பாஜக அப்படியல்ல" என்று கூறியிருந்தார்.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications