சீன ராணுவம் இந்திய சிறுவனை கடத்தியிருக்கு.. மோடி மவுனம் ஏன்.. அக்கறை இல்லையா? ராகுல் சரமாரி கேள்வி!
இட்டானகர்: அருணாச்சல் பிரதேச சிறுவனை சீன ராணுவம் கடத்தியது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது அவருக்கு சிறுவன்மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் மிரம் தாரோன் என்ற 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். சியாங்க் மாவட்டத்தில் லுங்டா ஜோர் என்ற இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று மிரம் தாரோன் கடத்தப்பட்டிருக்கிறார்.
சீனாவிலிருந்து சாங்க்போ ஆறு இந்தியாவுக்குள் நுழையும் இடத்திற்கு அருகில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தாரோனுடன் இருந்த அவரது நண்பர் ஜானி யாயியாங் அங்கிருந்து தப்பிவந்து, மிரம் கடத்தப்பட்டத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கடத்தல்
அருணாச்சல் மாநிலத்தின் லுங்டா ஜோர் பகுதிக்குள் ஏற்கனவே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, ஏற்கெனவே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதும் 17 வயது சிறுவனைக் கடத்தி இருக்கிறார்கள். சிறுவனை மீட்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. தபீர் காவோ கோரிக்கை வைத்துள்ளார்.

சீன ராணுவம்
கடந்த 2020ம் ஆண்டும் இதேபோல அருணாச்சல் பிரதேசத்தின் மேல் சுபான்சிரி மாவட்டத்தில் 5 சிறுவர்களை சீன ராணுவம் கடத்திச் சென்று பின்னர் ஒரு வாரம் கழித்து விடுவித்தது. சீன ராணுவம் கடத்தலில் ஈடுபட்டதை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் உள்ளிட்டோரை டிவிட்டரில் டேக் செய்து கடத்தல் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி தபீர் காபோ தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள்
கடத்தல் நடந்த பகுதியான லுங்டா ஜோர் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் சாலை அமைத்தது. அதன்பிறகு 2020ம் ஆண்டு இதுபோலவே அருணாச்சலில் 5 சிறுவர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும் ஒரு வாரம் கழித்து விடுவித்தது சீன ராணுவம். தற்போது மீண்டும் ஒரு கடத்தலில் ஈடுபட்டுள்ளது.
Recommended Video

ராகுல் காந்தி
அருணாச்சலத்தில் சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''குடியரசு தின விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் எதிர்காலத்தை, 17 வயது சிறுவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. கடத்தப்பட்ட சிறுவன் தாரோனின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதலாக உள்ளோம். நம்பிக்கை விட்டு விட வேண்டாம். நாம் நிச்சயம் வீழ மாட்டோம். பிரதமர் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார். அதுவே அவரது அலட்சியத்தை வெளிக்காட்டி விட்டது. சிறுவன் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications