For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன அதிபரின் மனதை மயக்கிய “குஜராத்” ஸ்பெஷல் வெண்டைக்காய், உருளைக் கிழங்கு கறி!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள சீன அதிபரான ஜி ஜின்பிங் எந்த பந்தாவும் இல்லாமல் பழகுவது போலவே, இந்திய உணவையும் ருசித்துச் சாப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி அளித்த விருந்தில் பாரம்பரிய குஜராத்திய சைவ உணவு வகைகளை விரும்பி உண்டார். இனிப்புகளும், கார வகைகளும், மற்ற குஜராத்துக்கே உரித்தான உணவு வகைகளும் சீன அதிபரின் நாக்கில் நடனாமாடும் என்பது உண்மைதான். சரி அவருடைய விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட்டது என்று பார்க்கலாம்.

சீரகம் கலந்த மோருடன் சிற்றுண்டி:

சீரகம் கலந்த மோருடன் சிற்றுண்டி:

சிற்றுண்டிகளாக முதலில் சீரகம் கலந்த மோர், குஜராத்தி மிக்சர், கடலை மாவு மற்றும் ரவை கலந்து செய்யப்பட்ட பலகாரம், அரிசி மாவு மற்றும் பாசிப்பருப்பு மாவு கலந்த பலகாரம் அளிக்கப்பட்டது.

கடலைமாவு டோக்ளா:

கடலைமாவு டோக்ளா:

கடலை மாவு, ரவை கலந்து தயாரிக்கப்பட்ட கேக்கை உதிர்த்து விட்டு, எலுமிச்சை சாறு பிழிந்து தாளித்து, மாதுளம் பழ விதைகளை அதில் தூவி தயாரிக்கப்பட்ட பலகாரம், பாசிப்பருப்பு மாவை உள்ளடக்கிய பலகாரம் கூடவே அளிக்கப்பட்டது.

அதிபரை மயக்கிய வெண்டைக்காய் பொறியல்:

அதிபரை மயக்கிய வெண்டைக்காய் பொறியல்:

பிரதான உணவில் கத்தரிக்காய், தக்காளி, கீரை கலந்த பொறியல், இனிப்பும் உப்பும் கலந்த பாசிப்பருப்பு, கீரை கலந்த காய்கறி கூட்டு, கடலையைப் பொடியாக்கி கலந்த வெண்டைக்காய் பொறியல் இடம்பெற்றிருந்தது.

பளபள பாஸ்மதி அரிசி சாதம்:

பளபள பாஸ்மதி அரிசி சாதம்:

உருளைக்கிழங்கு தக்காளி கலந்த பொறியல், பாஸ்மதி அரிசி சாதம், கடலை மாவு, யோகார்ட், கறிவேப்பிலை, கடுகு கலந்த குஜராத்தி காதி, சப்பாத்தி, கீரை கலந்த மாவில் செய்யப்பட்ட உணவு வகை, கோதுமையால் தயாரிக்கப்பட்ட ரொட்டி, காரட், வெங்காயம், தக்காளி, வௌ்ளரி, கறிவேப்பிலை கலந்தசாலட் விருந்தில் அமர்க்களப்பட்டது.

அரிசியால் செய்த இனிப்பு:

அரிசியால் செய்த இனிப்பு:

சாப்பாட்டிற்கு பின் வழங்கப்பட்ட சிற்றுண்டியில் பால், அரிசி, குங்குமப்பூ, பருப்புகள் கலந்த குளிர்ச்சியான கலவை, மாம்பழச்சாறும் தயிரும் கலந்த இனிப்பு, சூடான பீட்ரூட் அல்வா, பழத்துண்டுகள், சர்க்கரை கலக்காத கோதுமை லட்டு என்று சீன அதிபர் இந்தியர்களின் விருந்தோம்பலில் திக்கு முக்காடித்தான் போய்விட்டாராம் மகிழ்ச்சியில்.

English summary
Prime Minister narendraModi hosted a private dinner for Chinese President Xi Jinping and first lady of China Peng Liyuan at the newly-developed Sabarmati River Front in Ahmedabad on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X