தாயை சந்தித்து காலில் விழுந்த பிரதமர் மோடி..நல்லா இரு மகனே! ஆசியோடு அன்பை பகிர்ந்த அம்மா! நெகிழ்ச்சி
காந்திநகர்: காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தாய் ஹீராபென்னிடம் காலில் விழுந்து மோடி ஆசிர்வாதம் பெற்றார்.
எப்போதும் பிஸியாக இருக்கும் பிரதமர் மோடி, குஜராத் செல்லும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது தாயாரை சந்தித்து பேசிவிட்டு வருவது வழக்கம்.
தனது தாய் மீது அளப்பறிய அன்பு கொண்ட பிரதமர் மோடி, அவருடன் ஆசிர்வாதத்தையும் வாங்கி விட்டு வருவார்.

அம்மாவை சந்தித்த மோடி
அந்த வகையில், குஜாராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காந்திநகர் சென்றார். காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் (வயது 100) மோடியை சந்தித்து பேசினார். தேநீர் அருந்தியபடி தனது தாயாருடன் பிரதமர் மோடி அன்பாக பேசினர். ஹீராபென் மோடி சொல்வதை பிரதமர் மோடியுடன் மிகவும் கவனமாக கேட்டபடி இருந்தார். முன்னதாக தனது தாயாரை சந்தித்ததும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். சிறிது நேரம் தனது தாயருடன் நேரத்தை செலவிட்ட பிரதமர் மோடி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

குஜராத்தில் நாளை 2- ஆம் கட்ட தேர்தல்
காந்திநகர் வருவதற்கு முன்பாக பிரதமர் மோடி அகமதாபத்தில் பிரமுகஷ்வாமி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையும் தொடங்கி வைத்தார். 30 நாள் கொண்டாடப்படும் இந்த விழா வரும் டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி முடிவடைகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக கடந்த 1 ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது 2 ஆம் கட்டம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.

27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி
இந்த தேர்தலுக்கான பிராசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டனர். குஜராத்தில் கட்ந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்தமுறையும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக பாஜக உள்ளது. இதனால் அனல் பறக்கும் பிரசாரத்தில் பாஜக ஈடுபட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா, யோகி ஆதித்யநாத் என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தீவிர பிரசாரத்தி ஈடுபட்டு வந்தனர்.

இரட்டை என்ஜின் அரசு
குறிப்பாக பிரதமர் மோடி நேற்று முழுவதும் பிராசாரத்தில் ஈடுபட்டார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்தும், குஜராத்தில் இரட்டை என்ஜின் கொண்ட அரசால் நன்மைகள் கிடைக்கும் என்றும் பேசி வாக்குகளை சேகரித்தார். அதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் சாடினர்.












Click it and Unblock the Notifications