For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘நாளை எனக்கும் எக்ஸாம்’... மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடியுடன் சச்சின், விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பொதுத் தேர்வுகள் நெருங்கும் இந்நேரத்தில் மாணவர்கள் கலக்கமின்றி அதனை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறிய பிரதமர் மோடி, நாளை தமக்கும் பரீட்சை இருப்பதாக பட்ஜெட் தாக்கல் குறித்து நகைச்சுவையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மன் கி பாத் ( மனதிலிருந்து பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார்.

அப்போது மோடி பேசியதாவது:

எனக்கும் பரீட்சை...

எனக்கும் பரீட்சை...

நண்பர்களே, நாடாளுமன்றத்தில் பொதுபட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. உங்களுடைய தேர்வுகள் எதிர்நோக்கி உள்ளது, எனக்கு நாளை உள்ளது. நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது பட்ஜெட் மூலம், 125 கோடி இந்திய மக்கள் என்னை பரிசோதிக்க போகிறார்கள், எனக்கு நம்பிக்கை உள்ளது.

வெற்றி பெறுவோம்...

வெற்றி பெறுவோம்...

பாருங்கள் நான் எவ்வளது ஆரோக்கியமாக உணர்கிறேன். எவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறேன். நாளை எனக்குப் பரீட்சை. நாளை மறுநாள் உங்களுக்கு. நாம் அனைவரும் வெற்றி பெறுவோம். அதன் மூலம் தேசமும் வெற்றி பெறும்

அடுத்த கட்டம்...

அடுத்த கட்டம்...

வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் எவ்வித பதற்றமுமின்றி, எந்த மன சஞ்சலமும் இல்லாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும்.

உங்களுக்கு நீங்களே போட்டி....

உங்களுக்கு நீங்களே போட்டி....

நீங்கள் ஏன் பிறருடன் போட்டியிட வேண்டும்? உங்களுடன் நீங்களே போட்டியிடக் கூடாதா? இந்த தேர்வுகளில் என்ன நடக்கப்போகிறது என்று உங்களை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள், மிகவும் அதிகமான நோக்கத்துடன் பணியாற்றுங்கள்.

ஒழுக்கம் முக்கியம்...

ஒழுக்கம் முக்கியம்...

தேர்வு நேரங்களில் உங்களுடைய வழக்கமான பணிகள் முக்கியமானது. வலிமையான அடித்தளத்திற்கு பின்னால் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது.

இரண்டு வகை மாணவர்கள்...

இரண்டு வகை மாணவர்கள்...

வெற்றியடைவதற்கு ஒழுக்கமானது ஒரு வலிமையான அடித்தளத்தை அமைக்கும். தேர்வு எழுதஉள்ள இரண்டு விதமான மாணவர்களை பார்த்து உள்ளேன். ஒரு தரப்பினர் வலிமையில் கவனமாக இருப்பார்கள். மற்றொரு தரப்பினர் அவர்களுடைய திறமையின் மீது சந்தேகம் கொண்டு இருப்பார்கள், மிகவும் கவலைக் கொண்டு இருப்பார்கள். படிக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர்கள், எதுவந்தாலும் சந்திப்பார்கள்' என்றார்.

அமைதி காக்க வேண்டும்...

அமைதி காக்க வேண்டும்...

உங்களுடைய மனதானது அமைதியில் இருந்தால் அறிவு புதையலை கண்டுபிடிக்க முடியும், தேர்வும் உங்களுக்கு எளிமையானதாகும். நாம் பெரும்பாலும் தேர்வுக்கு பின்னர்தான் இவ்வளவு மதிப்பெண் எடுப்போம் என்று கணக்கிடுவோம், அதனை இப்போது செய்யாதீர்கள்.

யோகா செய்யுங்கள்...

யோகா செய்யுங்கள்...

நமது நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவிட்டு அமைதி கொள்ளவேண்டும். யோகா செய்யுங்கள் மன திறம் அதிகரிக்கும். இப்போதைய நாட்களில் தேர்வானது மாணவர்களுக்கு மட்டும் இல்லை, குடும்பத்திற்கே,

ஜே.கே.ரௌலிங்...

ஜே.கே.ரௌலிங்...

எந்தஒரு நேரத்திலும் யார் வேண்டுமானாலும் வெற்றியடையலாம் என்பதற்கு ஜே.கே. ரௌலிங் சிறந்த உதாரணம், அவர் மிகவும் கஷ்டங்கள் மற்றும் தோல்விகளை அனுபவித்தவர். குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுங்கள். ஆர்வமானது அறிவியலின் தாய், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல் கண்டுபிடிப்பு என்பது கிடையாது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சச்சினும் பங்கேற்பு....

சச்சினும் பங்கேற்பு....

இன்றைய நிகழ்ச்சியில், மோடியுடன் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் 'செஸ்' வீரர் விஸ்வநாதன், ஆனந்த், ஆன்மீக குரு மொராரி பாபு, விரிவுரையாளர் சிஎன்ஆர் ராவ் ஆகியோரும் உரையாற்றினர். அனைவரும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவுரையை வழங்கினர்.

English summary
"I have an exam too. 125 crore Indians are going to test me, tomorrow is the Budget," Prime Minister Narendra Modi said in his radio address Mann Ki Baat focussed on the board examinations for school students that begin on March 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X