For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்கள் பொய் சொல்வதை நிரூபித்தால் தோப்புக்கரணம் போட வேண்டும்.. சரியா? மோடிக்கு மம்தா செம சவால்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மாத்துவா சமூகத்தினருக்கு நான் நிறைய செய்திருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி எதையும் செய்யவில்லை என்பதை நிரூபித்தால் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மதம் குறித்து தேர்தல் பரப்புரையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதால் அவர் தேர்தல் பரப்புரையில் 24 மணி நேரத்திற்கு ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதிக்கப்பட்டது.

ரேஷன் அட்டைதாரருக்கான மண்ணெண்ணெயின் அளவு குறைகிறது.. தமிழக அரசு சுற்றறிக்கை! ரேஷன் அட்டைதாரருக்கான மண்ணெண்ணெயின் அளவு குறைகிறது.. தமிழக அரசு சுற்றறிக்கை!

இதை கண்டித்து நேற்றைய தினம் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து பராசாத் பகுதியில் தனியொருவராக ஒற்றை நாற்காலியை போட்டுக் கொண்டு போராட்டத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டிருந்தார்.

மாத்துவா சமூகம்

மாத்துவா சமூகம்

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் மாத்துவா சமூகம் உள்பட சிறுபான்மையினருக்கு மம்தா பானர்ஜி எந்த நல்லதையும் செய்யவில்லை.

மோடியின் சவால்

மோடியின் சவால்

ஆனால் மத்திய அரசு அவர்களின் நலனுக்காக நிறைய திட்டங்களை வகுத்துள்ளது. அந்த சமூகத்தினருக்கு தான் செய்ததை விளக்க மம்தா தயாரா என மோடி சவால் விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் மம்தா பானர்ஜி பேசுகையில் மோடியின் சவாலை நான் ஏற்கிறேன்.

தோப்புக்கரணம்

தோப்புக்கரணம்

நான் மாத்துவா சமூகத்தினருக்கு எதையும் செய்யவில்லை என்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். ஒரு வேளை அவர் எதையும் செய்யாமல் பொய்யை மட்டுமே சொல்லி வருகிறார் என்பது நிரூபணமானால் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டால் போதும்.

5ஆவது கட்டம்

5ஆவது கட்டம்

வாக்குப் பதிவு நடைபெறும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்வது ஏன்? மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இத்தனை ஆண்டுகளாக இப்படி நடந்ததில்லை. இதுவரை 4 கட்டங்கள் முடிந்துள்ளன. அடுத்த கட்ட, அதாவது 5ஆவது கட்ட தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மோடி பிரச்சாரம்

மோடி பிரச்சாரம்

வாக்குப் பதிவு நாட்களில் மோடி பிரச்சாரம் செய்வதை தேர்தல் ஆணையம் ஏன் தடுப்பதில்லை? தேர்தல் நாளன்று பொதுக் கூட்டங்களை ரத்து செய்ய நான் தயாராக உள்ளேன். மோடி ஒரு பொய்யர், தனது பொய்களால் மக்களை பிரதமர் மோடி தவறாக வழி நடத்துகிறார் என சரமாரியாக பேசினார் மம்தா பானர்ஜி.

English summary
West Bengal Chief Minister Mamta Banerjee says that PM Modi should do sit ups by holding his ears.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X