பிரதமர் மோடியின் ஒரு ஆண்டு வெளிநாட்டு பயண செலவு எவ்ளோ தெரியுமா? அதிகமில்லை… ரூ.37 கோடிதான்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ஒரு ஆண்டில் ரூ.37 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளில் முதலீட்டை திரட்டவும், தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ் திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், பிரதமரின் பயணச் செலவு குறித்து சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு இருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓராண்டு செலவு ரூ.37 கோடி
ஓராண்டில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அதில், ஒவ்வொரு நாடுகளுக்கும் அவர் சென்றபோது ஆன செலவு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்கே எவ்வளவு செலவு
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற வகையில் அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்கு அவர் சென்ற வகையில் செலவு முறையே ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.

ஹோட்டல் செலவு
பூடானுக்கு சென்ற போது தான் மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். நியூயார்க்கில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஓட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம்.

கார் பயண வாடகை
பிரதமர் மோடியுடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு படையினருக்கான கார் வாடகையாக ரூ.39 லட்சமும், தூர்தர்ஷன் குழுவினர் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

சீனாவில் செலவு
சீனாவில் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

பிரதமரின் இன்டர்நெட் செலவு
இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி. அதில் ஓட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம். மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications