For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி பேஸ்புக்கில் ஓரே நாளில் 7 லட்சம்பேர் லைக் போட்டு புதிய சாதனை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்ட 5 நாட்களுக்குள் 17 லட்சம் லைக்களை பெற்று சாதனை படைத்துள்ளது. நேற்று 10 லட்சமாக இருந்த லைக் நிலவரம் ஒரே நாளில் 7 லட்சம் அதிகரித்துள்ளது.

PMO India Facebook page gets over 17 lakhs ‘likes’ in four days

புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி, சமூக வலைதளங்களில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் அவரது அமைச்சர்களும் செயல்பட வேண்டும் என்று மோடி எதிர்பார்க்கிறார். மோடிக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையதளம் தனியாக உள்ளது. இருப்பினும் மோடி பிரதமரானதும், பிரதமர் அலுவலகத்துக்கென அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் துவங்கப்பட்டது. ஏற்கனவே பிரதமர் அலுவலகத்துக்கு டுவிட்டர் கணக்கு உள்ள நிலையில், பேஸ்புக் பக்கம் மட்டும் புதிதாக தொடங்கப்பட்டது. இதில், முகப்பு படமாக, பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தில் பணியாற்றும் படம் இடம் பெற்றுள்ளது.

இந்த பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் 5 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், 17 லட்சத்துக்கும் அதிமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. நேற்று 10 லட்சம் லைக்குகள் விழுந்த நிலையில், ஒரே நாளில் 7 லட்சம்பேர் லைக் செய்துள்ளனர். பிரதமருக்கான டுவிட்டர் பக்கத்தில் மோடியை 14 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில், மோடியின் சொந்த டுவிட்டர் கணக்கில் 45 லட்சம்பேர் பின்தொடருகிறார்கள்.

English summary
In just about four days of its launch, the official Facebook page of the Prime Minister’s Office has attracted over 1.7 million ‘likes’. The cover photo on the Facebook page of PMO India shows 63-yead-old Narendra Modi at work. He is an avid user of the social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X