நவராத்திரி விழாவில் இஸ்லாமிய இளைஞர்களை கட்டி வைத்து தாக்கிய போலீசார்? - குஜராத்தில் அதிர்ச்சி!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி நடைபெற்ற 'கர்பா' நிகழ்ச்சியில் இடையூறு செய்ததாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்கப்பட்டனர்.
கம்பத்தில் கட்டி வைத்து அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பது போலீசார் என்கிற கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கர்பா நிகழ்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது 'கர்பா' நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை குறிப்பிட்ட இடங்களில் நடத்தக்கூடாது என சில இஸ்லாமியர்கள் குறுக்கீடு செய்ததாகவும், அதனை மீறி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இஸ்லாமியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது கல்லெறிந்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல்
இவ்வாறு கல்லெறிந்ததாக சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமியர்களை சிலர் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை ஏதும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் எப்படி ஒருவரை தண்டிக்க முடியும் என்று பல சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பி இருந்தனர்.

விசாரணை
இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், தற்போது அந்த வீடியோ தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை தாக்கிய குழுவில் போலீசாரும் இருந்ததாக தனியார் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து மாநில காவல்துறை தலைவர் ஆஷிஷ் பாட்டியாவிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கைது
அவர் கூறியதைப்போல இந்த சம்பவம் குறித்து இரண்டு நாட்களில் விசாரணை முடிவடைந்து அறிக்கை ஆஷிஷ் பாட்டியாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில், தாக்குதலுக்கு உள்ளாகும் இஸ்லாமிய இளைஞர் இரு கைகளையும் கூப்பி மக்களிடம் மன்னிப்பு கோருகிறார். ஆனாலும் சிலர் தொடர்ந்து அந்த இளைஞரை தாக்கிக்கொண்டே இருக்கின்றனர். இது அனைவரின் நெஞ்சையும் பதறவைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications