மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் தீவிபத்து.. ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் #KamalaMills

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் பயங்கர தீ விபத்து...வீடியோ

மும்பை: மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்ராத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய மும்பையில் பரேல் பகுதியில் உள்ளது கமலா மில்ஸ். இங்கு ஹோட்டல்கள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களும் இந்த பல அடுக்கு கட்டடத்தில் இயங்கி வருகிறது.

President and PM expressed their condolence for Mumbai fire accident

இந்நிலையில் அங்கு 6-ஆவது மாடியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீவிபத்து நடைபெற்றது. இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது. இதில் 15 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தீயை அணைக்க கடுமையாக போராடிய தீயணைப்பு வீரர்களின் பணி பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி, தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President and PM expressed their condolence for Mumbai Kamala Mills fire accident which results 15 died.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற