வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால்... கோவாவில் உருகிய பிரதமர்..!
கோவா: மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இன்னும் கொஞ்சகாலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால் கோவா விடுதலை பெற இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படை வீரர்கள் கடந்த 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஆபரேசன் விஜய் என்ற திட்டத்தின் மூலம் மீட்டது. இந்த போரில் ஈடுபட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்ஃப் 19ஆம் தேதி கோவா விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கோவாவின் 60வது விடுதலை தின விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் கோவா பல்கலைக்கழக மைதானத்திற்க் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வரவேற்றார். தொடர்ந்து தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்க ஆசாத் மைதானம் வந்தடைந்த அவர், தியாகிகள் நினைவிடத்தில்மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பாய்மர கண்காட்சி
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பனாஜியில் பாய்மர அணிவகுப்பு மற்றும் ஃப்ளைபாஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கோவா விடுதலையின் 60வது ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தலீகாவோவில் உள்ள டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்திற்கு அவர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அரசு துறைகள், நபார்டு வங்கி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

வீரர்களை பராட்டிய மோடி
கோவா விடுதலை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் "ஆபரேஷன் விஜய்" வீரர்களை பாராட்டிய மோடி, ஃபோர்ட் அகுவாடா சிறை அருங்காட்சியகம், கோவா மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக், புதிய தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனை, மோபா விமான நிலையத்தில் விமானத் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் டபோலிம்-நவேலிமில் எரிவாயு இன்சுலேட்டட் துணை நிலையம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கொங்கனியில் மொழியில் வரவேற்பு
கொங்கனி மொழியில் கோவா மக்களை வரவேற்று தனது உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் கோவா விடுதலை பெற இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்காது என்று கூறினார்.

நல்லாட்சியில் கோவா முதலிடம்
நல்லாட்சியில் கோவா முதலிடத்தில் உள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, 450 ஆண்டுகள் போர்ச்சுகல் ஆட்சிக்கு பிறகும் இந்தியாவுடனான தொடர்பை கோவா இழக்கவில்லை என்று ம் அது இன்றும் இந்தியாவின் முக்கிய அங்கமாக திகழ்வதாகவும், அதற்காக கோவா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் , அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications