மத்திய அமைச்சக அதிகாரிகள் காலை 9 மணிக்கு "உள்ளேன் ஐயா" சொல்ல உத்தரவு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசில் மத்திய அமைச்சக அதிகாரிகள் காலை 9 மணிக்கு கண்டிப்பாக அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச அமைச்சர்கள், அதிகபட்ச நிர்வாகம் என்ற மந்திரத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவ்யில் உள்ள மத்திய அமைச்சர்கள் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.30 மணிக்கு வேலை முடிந்து செல்ல வேண்டும். 30 நிமிடம் உணவு இடைவேளை. பணி நேரத்தில் அலுவலர்கள் அனைவரும் இருக்கைகளில் இருக்க வேண்டும், இதர முக்கிய காரணங்களுக்கு மட்டும் இருக்கைகளை விட்டு செல்லலாம். இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகள் முடக்கத்தால், அலுவலர்கள் பெரும்பாலும் செயலற்றவர்களாக ஆகிவிட்டதை உணர்ந்த பின்னரே இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளை தங்கள் அமைச்சகத்தின் திட்டங்களை தயாரித்தல், நிறைவேற்ற வழிகாணுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவார்கள்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஊரக மேம்பாட்டு மந்திரியாக இருந்த ஜெய்ராம் ரமேஷ் உள்பட சில குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டுமே அதிகாரிகளை விரைவாக முடிவுகள் எடுக்கும்படி துரிதப்படுத்தினர். புதிய அரசின் இந்த உத்தரவுகள், வேகமாக பணிகள் நடைபெற உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications