For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்ட பிளஸ் டூ மாணவி, முதல் வகுப்பில் தேர்ச்சி! பெற்றோர் கதறல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக பியூசி 2ம் ஆண்டு (பிளஸ் டூ) ரிசல்ட்டுகள் இன்று வெளியாகின. ஹாஸ்டல் ஊழியரால் சுட்டு கொலை செய்யப்பட்ட பெங்களூர் மாணவி கவுதமி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பெங்களூர், காடுகோடியில் உள்ள பிரகதி பியூசி கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி பியூசி 2ம் ஆண்டு (பிளஸ் டூ) படித்து வந்தவர் கெளதமி (18). கர்நாடகத்தின் தும்கூர் நகரைச் சேர்ந்த இவரை மார்ச் 31ம் தேதி இரவு, அந்தக் ஹாஸ்டலில் வேலைபார்த்து வந்த மகேஷ் (30) என்ற பியூன் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார்.

PUC student Gautami, who was shot dead in her hostel room passed the exams with first class marks

இந்நிலையில், மார்ச் 12ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடைபெற்ற தேர்வில் கவுதமி சிறப்பாக தேர்வு எழுதியிருந்தார். இன்று பியூசி 2ம் ஆண்டு ரிசல்ட் வெளியாகியது. இதில், 68.24 சதவீத மாணவிகளும், 53.09 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட கவுதமியும், 525 மதிப்பெண்களுக்கு, 472 மார்க் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அதை பார்க்கதான், கவுதமி உயிரோடு இல்லை. மாணவியின் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

English summary
17-year old girl, Gautami, who was shot dead in her hostel room at a residential school by a school attendant in April, passed the exams with first class marks with a total of 472 marks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X