தடுப்பூசி போடலைனா கட்டாய விடுப்பு.. அதிரடியாக அறிவித்த மாநில அரசு.. அதிர்ந்துபோன அரசு ஊழியர்கள்!
சண்டிகர்: இந்தியா உள்பட உலகம் முழுவதையும் கொரோனா தொற்று தனது பிடியில் வைத்துள்ளது. முதல் அலை, இரண்டாம் அலை என்று அலை, அலையாக வந்து மக்களை பாடாய்படுத்தி வருகிறது. உலக நாடுகள் எத்தனையோ முயற்சி மேற்கொண்டாலும் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் கொரோனாவை இன்னும் முழுமையாக விரட்டியடிக்க முடியவில்லை.
கொரோனாவை விரட்டியடிக்கும் ஒரே பேராயுதம் எதுவென்றால் அது தடுப்பூசிதான். முன்பெல்லாம் விண்வெளிக்கு போட்டி, போட்டு ராக்கெட்டுகளை அனுப்பி கொண்டிருந்த உலகின் முன்னணி நாடுகள் தற்போது தடுப்பூசி செல்லுவதில் போட்டி, போட்டு வருகின்றன.
சிறிய நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை தடுப்பூசியின் அருமையை உணர்ந்து மக்களுக்கு ஆர்வமுடன் செலுத்தி வருகின்றன.

தடுப்பூசியின் பயன்
தடுப்பூசி செலுத்தினால்தான் தங்கள் நாட்டுக்குள் நுழைய முடியும் என்று மற்ற நாட்டு மக்களுக்கு பெரும்பாலான நாடுகள் அறிவித்து விட்டன. நமது இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உண்மையை சொல்லபோனால் இந்தியர்கள் முதலில் தடுப்பூசியை கண்டு பயந்தனர். இதனால் அதனை செலுத்திக்கொள்ள தயங்கினார்கள். இதனால் பல மாநிலங்களில் பெரும்பாலான தடுப்பூசிகள் வீணாகின.

கட்டாயம்
இதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையில் தடுப்பூசிகள் பயனை மக்கள் நன்கு புரிந்து கொணடனர். பின்னர் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர். தற்போது ஆதார் அட்டை வைத்திருப்பதுபோல் ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி போட்டால்தான் தங்கள் மாநிலத்துக்குள் வர வேண்டும் என்று அறிவித்து விட்டன.

கட்டாய விடுப்பு
பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசியை கட்டயாமாக்கி உள்ளன. இப்படி மக்களின் வாழ்வோடு கொரோனா தடுப்பூசிகள் ஒன்றிணைந்து விட்ட நிலையில் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போடா விட்டால் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பபடுவார்கள் என்று பஞ்சாப் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் அதிரடி உத்தரவு
இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இன்று வெளியிட்ட அதிரடி உத்தரவில், மாநில அரசு ஊழியர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். மருத்துவத்தைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைக் கூட எடுக்கத் தவறினால் செப்டம்பர் 15-க்குப் பிறகு கட்டாயமாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள். செப்டம்பர் 15-க்குள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

மக்களை பாதுகாக்க...
இந்த வலுவான நடவடிக்கை, மாநில மக்களை நோயிலிருந்து பாதுகாப்பதற்காக கொண்டு வரப்படுகிறது. இனிமேல் தடுப்பூசி போட்டவர்கள், தடுப்பூசி போடாதவர்களிடம் இருந்து தொற்று பரவிவிடும் என பயப்பட தேவையில்லை. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.தடுப்பூசிகள் அரசு ஊழியர்களைச் சென்றடைய சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் சிலர் இதில் மெத்தனமாக இருந்து வருகின்றனர். தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பவர்கள் முதல் டோஸ் பெறும் வரை விடுப்பில் செல்லுமாறு கேட்கப்படுவார்கள் என்று முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வரின் இந்த உத்தரவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு கருத்துக்களும், எதிர் கருத்துக்களும் உலா வருகின்றன.












Click it and Unblock the Notifications