For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“காமன் மேன்” கார்ட்டூனின் தந்தை ஆர்.கே.லக்‌ஷ்மண் கவலைக்கிடம்!

Google Oneindia Tamil News

புனே: இந்தியாவின் பிரபல கார்டூனிஸ்ட் ஆன ஆர்.கே.லக்‌ஷ்மண் உடல் நலக் குறைவு காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

94 வயதான லக்‌ஷ்மண் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

R.K. Laxman on ventilator support

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். லக்‌ஷ்மணின் பல முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லக்‌ஷ்மண். அதில் மிகப் பிரபலமானது காமன் மேன் என்ற கதாபாத்திரத்துடன் கூடிய கேலிச்சித்திரம்தான்.

இருப்பினும் அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் கார்டூன்கள் வரைவதை நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உயரிய விருதுகளான மகசேசே மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளவர் லக்‌ஷ்மண்.

ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டு ஒருமுறை பக்கவாதம், மற்றும் சிறுநீரக பாதிப்பினால் இவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Eminent cartoonist R.K. Laxman, 94, who was admitted to the Deenanath Mangeshkar Hospital in Pune on Saturday, is said to be in a critical condition after his health deteriorated suddenly late Sunday evening
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X