ரோஜாவை ஆபாச பட நடிகைனு விமர்சித்த பண்டாரு! துணைக்கு போன கணவர் ஆர்.கே.செல்வமணி! ட்விஸ்டால் பரபரப்பு
திருப்பதி: மனைவி ரோஜாவுக்காக ஆந்திர அரசியலில் அவருடைய கணவரும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி களமிறங்கியுள்ளார். இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1990 களில் நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கொடி கட்டி பறந்தார், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபுதேவா, சரத்குமார் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். இவருடைய முதல் படம் செம்பருத்தி, அந்த படத்தை ஆர்.கே. செல்வமணிதான் இயக்கினார்.

அந்த படத்தில் பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இயக்குநர் செல்வமணியும் ரோஜாவும் காதலித்தனர். இதையடுத்து செல்வமணி, ரோஜாவின் பெற்றோரை சந்தித்து பெண் கேட்டுள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்தது.
அன்று முதல் மனைவியின் திரைத்துறையில் எந்தவித இடையூறும் கொடுக்காமல் இருந்து வருகிறார் செல்வமணி. அது போல் அரசியலிலும் ரோஜாவுக்கு உருதுணையாக இருந்து வருகிறார். பெண் என்ற ஒரே காரணத்திற்காக ரோஜாவை தெலுங்கு தேசம் கட்சியினர் எத்தனை அவதூறு பரப்பி பேசினாலும் ரோஜா துவளாமல் இருக்க காரணமும் இவர்தான்.
மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு துணையாக இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை. இந்த நிலையில் இயக்குநர் செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார். ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில்தான் செல்வமணி கலந்து கொண்டார். ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என பேசினார். இதன் மூலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் அடுத்த தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என நடிகையும் அமைச்சருமான ரோஜா தெரிவித்து வருகிறார். மேலும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு சென்றதால் ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதற்காக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி பண்டாரு சத்யநாராயணன் , ரோஜா நிர்வாண படங்களில் நடித்தவர் என பெண் என்றும் பாராமல் விமர்சித்திருந்தார். இதற்கு நடிகைகள் ராதிகா, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து ரோஜாவுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications