திருமணத்தை இத்தனை நாள் மோடி மறைத்து ஏன்? ராகுல் கடும் தாக்கு!!
ஸ்ரீநகர்: தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் திருமணத்தை மறைத்துவிட்டு திடீரென நரேந்திர மனைவி இருக்கிறார் என்று மோடி கூறியுள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
நரேந்திர மோடி எத்தனை தேர்தல்களில் போட்டியிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது அவர் தமக்கு மனைவி இருப்பதாக சொல்கிறார். இத்தனை ஆண்டுகளாக இந்த விவகாரத்தை மோடி மறைத்தது ஏன்?
தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான உத்தரவால்தான் இப்போது மோடி ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்கள்தான் பெண்களின் கண்ணியம், மேம்பாடு பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். இதற்கு பாஜக என்ன பதில் சொல்லப் போகிறது?
மோடியின் ஆட்சியில் தானே இளம் பெண் ஒருவர் வேவுபார்க்கப்பட்டார். இளம்பெண் பயங்கரவாதி என்று சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படித்தான் பெண்களுக்கு "பாதுகாப்பும்" "மரியாதையும்" கொடுக்கிறது பாஜக.
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் செல்போனில் படம் பார்க்கிறார். அவர்கள் என்ன படம் பார்த்தார்கள் என்பது செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications