வாழ்நாள் கனவு.. ம.பி மாணவிகளை ராஜஸ்தான் வரவழைத்து ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி! நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர் : மத்திய பிரதேசத்தில் தன்னைச் சந்தித்த மாணவிகள் 3 பேர், தங்களுக்கு ஹெலிகாப்டரில் பறக்க ஆசை எனத் தெரிவித்திருந்த நிலையில், ராஜஸ்தானில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளும்போது, அந்த மாணவிகளையும் வரவழைத்து ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றார் ராகுல் காந்தி.

நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி, நூறாவது நாள் நடைபயணத்தை நெருங்கி வருகிறார்.

பல்வேறு மாநிலங்களில் யாத்திரையை முடித்துள்ள ராகுல் காந்தி, இடையிடையே பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி வருவது வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாரத் ஜோடோ யாத்திரை

பாரத் ஜோடோ யாத்திரை

இதற்கிடையே, பாரத் ஜோடோ யாத்திரைக்கு மத்தியில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 3 மாணவிகளின் கனவை நிறைவேற்றியுள்ளார் ராகுல் காந்தி. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவம்பர் 29-ஆம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ஆம் வகுப்பு மாணவிகளான ஷீத்தல், லகானியா மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவியான கிரிஜா ஆகியோர் ராகுல் காந்தியைச் சந்தித்தனர்.

ராகுல் உறுதி

ராகுல் உறுதி

அப்போது அந்த மாணவிகளின் கல்வி பற்றியும், எதிர்கால லட்சியம் குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் தங்களுக்கு ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடம் வெள்ளந்தியாக கூறினர். உடனே, மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

ஹெலிகாப்டரில்

ஹெலிகாப்டரில்

இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல் காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயண ஏற்பாட்டின்போது, மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் சந்தித்த மாணவிகளான ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல் காந்தி தன்னுடன் அழைத்துச் சென்றார்.

 நெகிழ்ச்சி சம்பவம்

நெகிழ்ச்சி சம்பவம்

விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல் காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் அட்வைஸ்

ராகுல் அட்வைஸ்

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், "முதல்முறையாக ஹெலிகாப்டரில் பறந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. குடும்பத்தினர் என்ன விரும்புகிறார்கள், சமுதாயம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்குமாறு ராகுல் காந்தி அறிவுறுத்தினார்" எனத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் வெற்றி

காங்கிரஸ் வெற்றி

இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் வென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 40 இடங்களுடன் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது காங்கிரஸ். இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் தலைமை சுக்விந்தர் சிங் சுகுவை முதல்வராகவும், முகேஷ் அக்னிகோத்ரியை துணை முதலமைச்சர் ஆகவும் தேர்வு செய்தது. இதையடுத்து, அவர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். மல்லிகார்ஜூன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த முதல் வெற்றி இது. பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கிய பிறகு காங்கிரஸ் அடைந்துள்ள முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+