For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபாவில் தூக்கத்தை துரத்த ஐடியா! முதல் வரிசையில் அமர்ந்த ராகுல்காந்தி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Rahul Gandhi takes front row seat in parliament
டெல்லி: நாடாளுமன்றத்தில் தூங்கி வழிந்த ராகுல்காந்தியை, முன்வரிசையில் உட்கார செய்துள்ளார் காங்கிரஸ் தலைவரும், ராகுலின் தாயாருமான சோனியாகாந்தி.

லோக்சபாவில் கடந்த புதன்கிழமை, விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, ராகுல்காந்தி தனது இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாக படங்கள் வெளியாகியிருந்தன. இது பாஜக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனத்தை உருவாக்கியது.

இந்நிலையில் நேற்று, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருந்தபோது, நடுவில் ஐந்து நிமிடம், இடைவெளி எடுத்துக்கொண்டார். அப்போது, சோனியா தனது மகனான ராகுல்காந்தியை, தன் பக்கத்தில் முன்வரிசையில் வந்து அமருமாறு அழைத்தார். இதையடுத்து ராகுலும் முன்வரிசையில் தாய் அருகே வந்து அமர்ந்துகொண்டார்.

இதன்பிறகு இன்றும் நாடாளுமன்றத்தில் ராகுல் முன்வரிசையிலேயே தொடருகிறார். முதல் வரிசையில் வந்து அமர்ந்தால், தூக்கம் வராது என்பதற்காக சோனியா இந்த ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராகுல் அமர்ந்த இடத்தில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா அமர்ந்திருந்தார். அவரும் விவாதம் நடந்தபோது, சற்று கண் அசந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அலைபாய்கின்றன.

English summary
A day after an image of Rahul Gandhi suggesting his intermediate dozing off in the Parliament went viral, the Vice President of Congress today had a front row seat for the first Union Budget of the NDA government, presented by Finance Minister Arun Jaitley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X