காங்கிரசுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி... எப்போதும் உறுதுணையாக இருப்போம்... ராகுல் காந்தி உறுதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். எப்போதும் கர்நாடக மக்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றுள்ளது. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வென்றுள்ளனர். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மஜத உரிமை கோரியுள்ளது.

Rahul gandhi thanks karnataka people

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய ஆதரவு நாங்கள் மதிக்கிறோம். உங்களுக்காக எப்போதும் போராடுவோம்.

ஓய்வில்லாமல் இந்த தேர்தலில் உழைந்த கட்சியின் அனைத்து தலைவர்கள், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
rahul gandhi on karnataka elections. thanks people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற