For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட்டில் புதிய வகை ரயில்கள் அறிமுகம்.. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு முக்கியத்துவம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: முன்பதிவு செய்யாமல் பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து இதுகுறித்து சுரேஷ் பிரபு தெரிவித்ததாவது:

Rail Budget 2016: Suresh Prabhu announces innovative new trains
  • நெடுந்தூர ஊர்களுக்கு நடுவே 'அந்தியாதயா எக்ஸ்பிரஸ்' என்ற சூப்பர் பார்ஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிகமும் செய்யப்படும். பயணிகள் கூட்டம் அதிகமுள்ள நகரங்கள் நடுவே இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில் முழுக்க முன்பதிவற்றதாகும்.
  • நெடுந்தூர நகரங்களுக்கு நடுவே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு முன்பதிவற்ற ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். குடிநீர் வசதி, கூடுதல் செல்போன் சார்ஜ் பாயிண்டுகள் கொண்ட இந்த பெட்டிகள், தீன் தயாளு கோச் என்று அழைக்கப்படும்.
  • முழுக்க 3 அடுக்கு ஏசி வசதி கொண்ட ரயில்கள் ஹும்சபார் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும். இதில், உணவு ஆர்டர் செய்யவும் வாய்ப்பு உண்டு.
  • தேஜாஸ் என்ற பெயரில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் துரித வேக ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். வருங்கால துரித ரயில்களின் முன்னோடியாக இந்த வகை ரயில்கள் இருக்கும்.
  • தானியங்கி கதவு, பொழுதுபோக்கு ஸ்க்ரீன் வசதி, பார்கோட் ரீடர் போன்றவை கொண்ட நவீன ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும்.
  • பயணிகள் நெரிசல் அதிகமுள்ள ரூட்டுகளில் இரவு நேர டபுள் டக்கர், ஏசி ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். இது 40 சதவீத நெரிசலை குறைக்கும். இவ்வாறு சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
  • இந்த ஆண்டு வைஃபை வசதி 100 ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 400 ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். இதனால் இலவச இணையதள வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பட்ஜெட்டில் புதிய ரயில்களை அறிமுகம் செய்யவில்லை என்றபோதிலும், இதுபோன்ற புதியவகை ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை ரயில்கள் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

English summary
Railway Minister Suresh Prabhu in his Rail Budget speech announced many new trains which will cater to the growing demand for services.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X