இனி ரயில்களின் விவரம் கூகுள் மேப்பில்- இந்திய ரயில்வே அறிவிப்பு
மும்பை: இந்திய ரயில்வே சென்னை உள்ளிட்ட எட்டு இந்திய நகரங்களுக்கான ரயில்வே கால அட்டவணையும், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பாதையையும் கூகுள் மேப்ஸில் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருளான கூகுள் மேப்ஸ் முக்கிய இடங்களுக்கு செல்லும் வழி , பயணங்களைத் திட்டமிடல் போன்றவற்றிற்கு உதவுகின்றது.

தற்போது இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களின் ரயில் சேவை குறித்த விவரங்களையும் பேருந்து பாதை குறித்த விவரங்களையும் இணைத்துள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட இந்தியா தொடர்புடைய தகவல்களை மக்கள் தங்கள் மொபைல் போனில் அல்லது கணிணியில் இருந்து கூகுள் மேப்ஸ் டிரான்சிட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதை குறித்து கூகுள் மேப்ஸ் இயக்குனர் சுரேன் ருஹேலா கூறுகையில் "கூகுல் டிரான்ஸிட் என்பது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கூகுள் மேப்ஸ் பயனர்களுக்கு விரிவான மற்றும் துள்ளியமான பயனளிக்கும் தகவல்களை அளிக்கும் முயற்சி ஆகும்.
இந்தியாவில் ரயில் மற்றும் பேருந்து சேவையை சார்ந்துள்ள மக்களுக்கு தங்கள் இலக்கை அடைய கூகுல் டிரான்ஸிட் பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகின்றோம்" என்றார்.
தற்போது கூகுல் டிரான்ஸிட்டில் சுமார் 12,000 இந்திய ரயில்களின் கால அட்டவணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களின் அரசு போக்குவரத்து விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

கூகுள் டிரான்ஸிட் பயன்படுத்தும் முறையை குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், "மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை கூகுள் மேப்ஸில் உள்ளிட்ட பின்னர் கெட் டைரக்சன்ஸ் என்னும் பட்டனை அழுத்தவும்,பின்னர் Public Transit என்னும் பட்டனை தேர்வு செய்து ரயில் மற்றும் பேருந்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications