பெங்களூரில் நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த கன மழை.. சாலைகளில் டிராபிக் நெரிசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூரில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஓடியது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

நேற்று நள்ளிரவில் கொட்ட ஆரம்பித்த மழை, இடியுடன் கூடிய கன மழையாக தொடர்ந்தது. இரவு முழுக்க மழை தொடர்ந்தது. காலையிலும் மழை தொடர்ந்ததால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகள் செல்வோர் கடும் அவதிப்பட்டனர். டிராபிக் நெரிசலால் வாகன ஓட்டிகள் மழையில் நிற்க வேண்டியதாயிற்று. தொடர் மழையால் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.

Rain lashes Bengaluru since midnight

வானிலை இலாகா தகவல்படி இன்று காலை 8.30 மணிவரையில், தெற்கு புறநகரான ஆனேக்கல்லில் 99.5 மி.மீ மழை பெய்துள்ளது. வடக்கு புறநகர் பகுதியான பாகல்குண்டேயில் 88.5 மி.மீ மழையும், கிழக்கு பெங்களூரில் சராசரியாக 70 மி.மீ மழையும், தெற்கு பெங்களூரில் சராசரியாக 63 மி.மீ மழையும் பெய்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain lashes Bengaluru since midnight resulted flood in roads.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற