For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யப்போவது வசுந்தரா ராஜே? கலங்கடிக்கும் கள நிலவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதிசெய்ய போகும் வசுந்தரா ராஜே?- வீடியோ

    ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் இருப்பதால், அதை அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. வசுந்தர ராஜே முதல்வராக உள்ளார். டிசம்பர் 7ம் தேதி, ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி உள்ளது.

    இரு கட்சிகளுமே தங்கள் தேர்தல் வெற்றிக்கு வியூகங்கள் வகுத்து வருகின்றன.

    சபாஷ் சரியான போட்டி.. சபாஷ் சரியான போட்டி.. "வீ டு"வின் "ஆண்கள் வெர்ஷன்" இப்போது வந்தாச்சு!

    முதல்வர் மீதான குற்றச்சாட்டு

    முதல்வர் மீதான குற்றச்சாட்டு

    இந்த தேர்தலில் முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட அமைச்சரவையில் இருக்கும், பலர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, அராஜகம், ஆணவத்தோடு நடந்து கொண்டதாக வசுந்தரா ராஜே மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை முன்வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. இதுதான் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    முதல்வர் மீது குற்றச்சாட்டு

    முதல்வர் மீது குற்றச்சாட்டு

    ரானி தேரி காயிர் நஹி, என்ற பெயரிலான ஸ்லோகன் அங்கு புகழடைந்து வருகிறது. வசுந்தரா ராஜேவை ராணி போல சித்தரிக்கும் வார்த்தை இதுவாகும். பாஜக மீதான அதிருப்தியால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கப்போவதில்லை. வசுந்தரா ராஜே மீதான அதிருப்தியால்தான் வாக்களிக்கப்போகிறார்கள் என்று அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

    மக்கள் தடுத்தனர்

    மக்கள் தடுத்தனர்

    ராஜஸ்தானில் வசுந்தரா சென்ற கவுரவ் யாத்திரை பல இடங்களில் மக்களால் தடுக்கப்பட்டது. இதனால் வேறு பாதைகளில் அவர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், ராணியை அவர் அரண்மனைக்கு திருப்பியனுப்புங்கள் என்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் கூட முடியாததை, வசுந்தரா காங்கிரசுக்காக செய்து கொடுப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதாவது காங்கிரசுக்கு வாக்குகளை பெற்றுத்தரப்போவது வசுந்தரா ராஜே என்கிறார்கள் அங்குள்ள அரசியல் விமர்சகர்கள்.

    காங்கிரசுக்கு லாபம்

    காங்கிரசுக்கு லாபம்

    இதையெல்லாம் பாஜக மேலிடமும் கருத்தில் கொள்ளாமல் இல்லை. எனவேதான் புதிதாக பலருக்கும் போட்டியிட டிக்கெட் கொடுத்து பழைய முகங்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் வசுந்தரா ராஜேதான் பாஜக முதல்வர் வேட்பாளர் என்பதில் பாஜக தலைமை உறுதியாக உள்ளது. எனவேதான் காங்கிரசும் வசுந்தரா ராஜேவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி வருகிறது.

    English summary
    In the Rajasthan Assembly elections chief minister Vasundhara Raje has become an Achilles Heel for the Bharatiya Janata Party and the biggest issue which the opposition Congress is capitalising on. The Bharatiya Janata Party too feels the same way while people say that the party by projecting her as the chief ministerial candidate has offered the state to the Congress in platter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X