For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"வெறி"யர்களின் அடுத்த அராஜகம்.. "பசு மாட்டை எங்கே கடத்திட்டு போறீங்க".. இளைஞர் அடித்தே கொலை.. ஷாக்

பசுக்களை கடத்தியதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: பசுக்களை கடத்தி சென்றதாக சந்தேகப்பட்டு, 2 பேரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது.. இதில் ஒருவர் துடிதுடித்து இறந்துவிட்டார்.. இன்னொருத்தர் சீரியஸாக இருக்கிறார்...!!

ராஜஸ்தானை பொறுத்தவரை அவர்களின் தொழில் கால்நடை வளர்ப்புதான்.. அதனால்தான நாட்டின் 2வது பெரிய கால்நடை வர்த்தகமாக ராஜஸ்தான் திகழ்கிறது..

ஆனால் கடந்த முறை இங்கு நடந்த பாஜக ஆட்சியில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அராஜகத்தில் தொடர்ந்து ஈடுட்டு வருகின்றனர்.

லாரிக்கு அடியில் சிக்கிய கன்று.. அங்கும் இங்கும் பதறி ஓடிய பசு.. மீட்ட மக்கள்.. அவளும் தாய்தானே! லாரிக்கு அடியில் சிக்கிய கன்று.. அங்கும் இங்கும் பதறி ஓடிய பசு.. மீட்ட மக்கள்.. அவளும் தாய்தானே!

இறைச்சி

இறைச்சி

2017-ல், பெலுகான் என்பவர் ஜெய்ப்பூரில் இருந்து சில பசுமாடுகளை வாங்கி கொண்டு தன்னுடைய ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போதுதான், பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குண்டர்கள் அவரை வழிமறித்தனர்.. இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதாக சொல்லி அவரை சரமாரியாக தாக்கினர்.. கடைசியில் இதில் பெலுகான் இறந்தே விட்டார்.. இப்படித்தான் மெல்ல மெல்ல, பசுபாதுகாவலர்கள் தலைதூக்கினர்..

வியாபாரி

வியாபாரி

"பசு மாடுகளை யாராவது கடத்தினாலும் சரி, வெட்டினாலும் சரி, கொல்லப்படுவார்கள்" என்று பாஜக எம்எல்ஏவே ஒருமுறை சொல்லி இருந்ததை இங்கு நினைவுகூற வேண்டி உள்ளது... இப்போதும் அதுபோலவே, ஒரு கொடிய சம்பவம் நடந்துள்ளது.. மத்திய பிரதேசத்தின் அச்சல்பூரை சேர்ந்தவர் பாபு லால் பில்.. இவர் நண்பர் பெயர் பிந்து.. இவர்கள் 2 பேரும் வேனில் மாடுகளை ஏற்றி கொண்டு ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தனர்.

தாக்குதல்

தாக்குதல்

சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்கு சென்றபோது, அங்கே ஒரு கும்பல் இவர்களை திடீரென வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளது... மாடுகளை எங்கே கொண்டு போகிறீர்கள்? கடத்தி கொண்டு போகிறீர்களா? என்று கேட்டு, அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்க ஆரம்பித்துவிட்டது.

 தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.. ஆனால், அதற்குள் அந்த கும்பல் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த ஆவணங்களையும் செல்போன்களையும் பறித்து கொண்டது.. போலீசாரை பார்த்ததும் எகிறி தப்பி ஓடியது.. படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் வழியிலேயே பாபு லால் பில் இறந்துவிட்டார்..

விசாரணை

விசாரணை

பிந்து படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்... அவரது நிலைமை இப்போது சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் ஐஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..இதுகுறித்து அவர் சொல்லும்போது, சம்பவம் தொடர்பாக ஒருசிலரை நாங்கள் பிடித்து விசாரணை நடத்திவருகிறோம்... இதில் குற்றம் சாட்டப்பட்ட யாரையும் தப்பிக்க விடமாட்டோம்.. விரைவில் எல்லோருமே கைதாவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக

பாஜக

எனினும், நாளுக்கு நாள், இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உயிர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது... அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்துள்ளது... அதுவும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பிறகு இது மேலும் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..!

English summary
Rajasthan Man beaten to death on suspicion of Kidnapping Cows
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X