அயோத்தியில் ராமர் கோவிலை கட்டாமல் ஓயமாட்டோம்: 'அக்கப்போர்' சாக்ஷி மகாராஜ்
Subscribe to Oneindia Tamil
உன்னாவ்: அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அயோத்தியில் சிறப்பான தோற்றத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று பாரதிய ஜனதாவின் சர்ச்சைக்குரிய எம்.பி. சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் 'முகம் சுளிக்க' வைக்கக் கூடிய வகையில் துவேஷங்களை பரப்புகிற நபர்களில் எம்.பி. சாக்ஷி மகாராஜ் முதன்மையான நபர்.

தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
அயோத்தியில் ராமர் கோவில் இருந்தது. வரும் காலத்திலும் அயோத்தியில் ராமர் கோவில் இருக்கும்.
2019ஆம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும். பாபர் பெயரில் ஒரு கல்லை கூட அங்கு வைக்க யாருக்கும் அனுமதி அளிக்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications