For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். 2வது வேட்பாளர் பட்டியல் - அன்புமணிக்கு எதிராக வாழப்பாடியார் மகன் ராம சுகந்தனுக்கு 'சீட்'!

|

டெல்லி: காங்கிரஸ் கட்சி தனது 6வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்துக்கான 2வது வேட்பாளர் பட்டியலும் அடங்கியுள்ளது.

தர்மபுரி தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Rama Suganthan is the Congress candidate against Anbumani Ramadoss

தர்மபுரி தொகுதியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ், போட்டியிடுவது நினைவிருக்கலாம். அவருக்கு எதிராக வலுவான வேட்பாளராக வாழப்பாடியாரின் மகனை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், வலுவானவர்களாக இருப்பதும் போட்டியை கெடுபிடியாக்கியுள்ளது.

இவர்கள் தவிர திருவள்ளூரில் விக்டரி எம். ஜெயக்குமார், பொள்ளாச்சியில் கே,செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் சேர்த்து இதுவரை தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் 33 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

இத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress party has fielded Rama Suganthan against Anbumani Ramadoss in Dharmapuri. He is the son of late Vazhapadi Ramamurthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X