For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பக்கா வளங்களுடன் திகழும் ஆந்திராவின் அக்காவரம்….

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: அணுசக்திக்கு உபயோகப்படும் அரியவகை இயாந்தினைட் கனிமவளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவ்வளம் பெற்ற எட்டு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இணைந்துள்ளது.

அணுசக்திக்கு தேவையான யுரேனியம் வகையை சேர்ந்த இயாந்தினைட் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அணுசக்திக்கு தேவையான அரிய வகை கனிமமான யுரேனியம் ஆக்ஸைடின் மற்றொரு வகையான இயாந்தினைட் ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் அச்சம்பேட் மண்டல் பகுதியை சேர்ந்த அக்காவரம் கிராமத்தில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Rare mineral found in Andhra's Akkavaram

இதன் மூலம் அரியவகை கனிமங்களை கொண்டுள்ள நாடுகளின் வரிசையி்ல் இந்தியா இணைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி எட்டு நாடுகளில் மட்டுமே இந்த வகையான கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின்வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவில் இத்தகைய கனிம வளம் இருப்பது கண்டுப்பிடித்திருப்பது இது தான் முதல் முறையாகும்.

அணுசக்தி இயக்குனரகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர். இயாந்தினைட் கனிம வளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் அகாடமியின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் அனாடைஸ்,ருட்டில், மைக்ரோலைன், பயோடைட், மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிம வகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

English summary
“Ianthinite” which is used for atomic fuel was founded in Akkavaram which is the small village in Andra. The atomic directorate researchers found this rare mineral in India the first time. India will get placed in 8 countries which are having this mineral sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X