For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெபாசிட் ஆன பழைய ரூபாய் நோட்டு விவரங்களை ஈமெயிலில் தெரிவியுங்கள்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை வங்கிகள் இன்று மாலையே இ-மெயில் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: வங்கி கணக்குகளில் இன்று டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை வங்கிகள் இன்று மாலையே இ-மெயில் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

RBI asks banks to furnish details on deposits in discarded notes

இந்த நிலையில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக 50 நாள் காலக்கெடு முடிவடைந்து. இதனிடையே வங்கி கணக்குகளில் பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்துவதற்கு இன்றே கடைசி நாளாகும்.

இந்நிலையில் இன்று டெபாசிட் ஆகி உள்ள செல்லாத ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் குறித்த விவரங்களையும் வங்கி நேர முடிவில் எவ்வளவு தொகை இருக்கிறது என்னும் தகவலை உடனடியாக இமெயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பொதுத்துறை, தனியார், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் தங்கள் கிளைகளில் எவ்வளவு பழைய நோட்டுகள் தொகை உள்ளது என்பதை ஒருங்கிணைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், டிசம்பா 31ம் தேதிக்குப் பிறகு இந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியின் சொத்தாக வைத்துக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
the Reserve Bank of India on Friday issued guidelines for banks to furnish details about total deposits made in discarded notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X