பற்றி எரியும் மும்பை.. கலவர பூமியான புனே... என்ன நடக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  புனேயில் இந்துத்துவா குழு தாக்குதலில் ஒரு தலித் பலி- வீடியோ

  மும்பை: இந்த புது வருட தொடக்கமே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மிகவும் மோசமாக ஆரம்பித்து இருக்கிறது. திங்கள் கிழமை தொடங்கிய கலவரம் நேற்று இரவு வரை நடந்து இருக்கிறது.

  200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர் ஒன்று இந்த கலவரத்தை உருவாக்கி இருக்கிறது என்று கூறினால் யாருமே நம்ப மாட்டார்கள். ஆம் 200 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஜாதி பிரிவினருக்கு இடையில் நடந்த வெற்றியை 2018ன் முதல் நாளில் கொண்டாடும் போதுதான் இந்த கலவரம் உருவாகி இருக்கிறது.

  இதனால் இரண்டு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு தெருக்களிலும் கொத்தாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது.

  போரும் கலவரமும்

  போரும் கலவரமும்

  200 வருடங்களுக்கு முன்பு நடந்த போர் ஒன்றில் தலித் பிரிவினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த போர் நினைவு தினம் வருடா வருடம் கொண்டாடப்படும். பீமா கோரேகான் போர் நினைவு தினம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்த வருடம் 200 நினைவு வருடம் என்பதால் மிகவும் பெரிய அளவில் மக்கள் திரளாக கூடினார்கள்.

  போருக்கு பின் கலவரம்

  போருக்கு பின் கலவரம்

  இந்த நினைவு தின விழாவில் புகுந்த இந்துத்துவா அமைப்பினர் அங்கு இருந்த தலித் மக்களை தாக்க தொடங்கினர். இது பெரிய கலவரமாக மாறியது. இரண்டு குழுவினரும் மாற்றி மாற்றி தாக்கி கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் தலித் குழுவை சேர்ந்த ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

  பெரிய பிரச்சனை

  பெரிய பிரச்சனை

  இந்த பிரச்சனை டிசம்பர் 1 அன்று நடந்தது.அதற்கு மறுநாள்தான் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. புனே முழுக்க தலித் குழுக்கள் கலவரம் செய்ய தொடங்கினர். பின் இது தலித்-இந்துத்துவா கலவரமாக உருவெடுத்தது. புனேயில் இருக்கும் கடைகள், பொது சொத்துக்கள், கார்கள் என எல்லாம் கொளுத்தப்பட்டது. முதல்வர் தொடங்கி போலீஸ் வரை யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியாத அளவிற்கு பிரச்சனை கட்டுக்கடங்காமல் போனது.

  மும்பை

  மும்பை

  புனே குறித்து போலீஸ் சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே கலவரம் மும்பைக்கும் பரவியது. மும்பையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் கலவரம் தீயாக பரவியது. மும்பை- புனே சாலை மூடப்பட்டது. நிறைய பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் எத்தனை பேர் இறந்து இருப்பார்கள் என்று இதுவரை தெளிவான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

  பந்த்

  பந்த்

  கடந்த சில வருடங்களாகவே மும்பையில் தலித்துகள் அதிகம் தாக்கப்பட்டு வருகிறார்கள். தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் இந்த பந்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். இந்த பந்துக்கு மார்க்சிஸ்ட் உட்பட 250 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அங்கு நாளை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The whole Maharashtra state has affected by riot that took place yesterday in Mumbai. This riot has initially created in Pune after the death of a Dalit man in small riot.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற