5 நாளாக நடக்கும் விவசாயிகள் பேரணி.. சாலையை அதிரவைக்கும் 35,000 பேரின் நடை.. என்னதான் காரணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 5 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 35 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாளை இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டலாம் என்று கூறப்படுகிறது. நாளை அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள்.

தமிழ் விவசாயிகள் டெல்லியில் போராடிய போது போட்ட விதைதான் இந்த போராட்டத்திற்கு மிக முக்கியமான காரணம். ஆனால் அதுமட்டும் இல்லாமல் மேலும் 6 காரணங்கள் இந்த போராட்டத்திற்கு பின் இருக்கிறது.

உரிமை

உரிமை

இந்த போராட்டத்திற்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல காட்டுப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்கள் விவசாயம் பார்த்தாலும் , அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. அவர்கள் சொந்தமாக நிலம் பெறுவது ஆளும் பாஜக கட்சிக்கே பிடிக்கவில்லை. காட்டுப்பகுதிக்கு நிலம் கேட்டு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மழை

மழை

இரண்டாவது, மஹாராஷ்டிரா மாநிலத்தை இயற்கையும் மோசமாக பாதித்தது. 16 சதவிகிதம் வரை அந்த மாநிலத்தில் மழை குறைந்து இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கரும்பு உற்பத்தி தொடங்கி மொத்தமாக அனைத்து உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து போனது.

பணம் மதிப்பிழப்பு

பணம் மதிப்பிழப்பு

2016 இறுதியில் அந்த மாநிலத்தில் பொருளாதார நிலை மிகவும் நன்றாகவே இருந்தது. அந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் இப்போது இந்த போராட்டத்திற்கு காரணமே வந்து இருக்காது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக மொத்தமாக வளர்ச்சி பாதித்தது. 22.5 சதவிகிதம் வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலம்

மாநிலம்

மேற்கண்ட காரணங்களால் அந்த மாநிலத்தின் வளர்ச்சி அடியோடு குறைந்தது. 8.3 ஆக இருந் சதவிகிதம் 7.3சதவிகிதமாக குறைந்து போனது. அந்த மாநிலத்தின் வளர்ச்சி குறைத்த காரணத்தால் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டு சதவிகிதமும் குறைந்தது.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

மஹாராஷ்டிரா மாநில முதல்வராக 34,022 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதில் அம்மாநில அரசு கொஞ்சம் சாதனை செய்து இருக்கிறது என்று கூறலாம். 23,102.19 கோடி லோன் வரை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு கையெழுத்து இட்டு இருக்கிறது. இன்னும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளது.

இழப்பு

இழப்பு

ஆனால் கடன் தள்ளுபடியை தவிர்த்து வேறு எந்த பிரச்சனைக்கும் இழப்பீடு கொடுக்கப்படவில்லை. 1 ரூபாய் கூட இழப்பீடு என்று கொடுக்கப்படவில்லை. அம்மாநில விவசாயம் ஓகி புயல் காரணமாகவும் பாதித்தது. ஆனால் அதற்கும் போதிய அளவு இழப்பீடு கொடுக்கப்படவில்லை. இதுவே போராட்டத்திற்கான காரணமாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There are 6 reasons behind the Farmers protest in Mumbai. The Protest led by more than 35,000 farmers of All Indian Kisan Sabha (AIKS), demanding a complete waiver of loans, arrived in Mumbai on Sunday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற