'நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட சாலைகள் ரொம்ப சாஃப்ட்' .. சொல்வது காங்கிரஸ் எம்.எல்.ஏ
ராஞ்சி: நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட சாலைகள் மென்மையாக இருக்கும் என்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளார். சாலைகளையும், நடிகைகளின் கன்னத்தையும் ஒப்பிட்டு அரசியல் தலைவர்கள் பேசி வருவது அதிகரித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரசை சேர்ந்த டாக்டர் இர்பான் அன்சாரி. இவர் தனது தொகுதியில் செய்யப்பட்ட சாலை பணிகள் குறித்து தான் பேசும் வீடியோ ஓன்றை வெளியிட்டார்.

கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட..
அந்த வீடியோவில், ' ஜம்தாரா தொகுதியில் 14 உலகத் தரம் வாய்ந்த சாலைகள் விரைவில் கட்டப்படும் என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தொகுதியில் போடப்படும் சாலைகள் அனைத்தும் தரமாக, உறுதியாக இருக்கும். அதாவது திரைப்பட நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட ஜம்தாரா சாலைகள் மென்மையாக இருக்கும்' என்று அவர் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இவர் ஏற்கனவே சர்ச்சை நாயகன்தான்
இர்பான் அன்சாரி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவுக்கு கீழே நெட்டின்சன்கள் கிண்டலாக மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர். எம்எல்ஏ இர்பான் அன்சாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதன்முறை அல்ல. இந்த வார தொடக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், 'மக்கள் நீண்ட நேரம் மாஸ்க்கை அணியக்கூடாது, அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

வழக்கமாகி விட்டது
நான் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர். நீண்ட நேரம் மாஸ்க்கை உபயோகிப்பது கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுக்க வழிவகுக்கும் என்பது எனக்கு தெரியும்' என்று அவர் கூறியதால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல் சாலைகளையும், நடிகைகளின் கன்னத்தையும் ஒப்பிட்டு அரசியல் தலைவர்கள் பேசுவது இது முதன்முறை அல்ல.
Recommended Video

ஹேமமாலினி, கத்ரீனா கைஃப் கன்னத்துடன் ஒப்பிட்ட தலைவர்கள்
கடந்த மாதம் மகாராஷ்டிர அமைச்சரும் மூத்த சிவசேனா தலைவருமான குலாப்ராவ் பாட்டீல், தனது தொகுதியான ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சாலைகளை நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு மாநில மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கடைசியில் மன்னிப்பு கேட்டார். கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர சிங் குதா மாநிலத்தின் சாலைகளை நடிகை கத்ரீனா கைஃப்பின் கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசியது சமூகவலைத்தளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications