For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது... அடுத்து என்ன செய்யலாம்?

இன்று நள்ளிரவு முதல் ரூ500; ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-க்குள் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள்லாம்; தவிர்க்க் இயலாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-ந் தேதி வரையும் மாற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rs 500, Rs 1,000 notes pulled out circulation announces Modi

பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்து செய்ய வேண்டியது என்ன?

- இன்று நள்ளிரவு முதல் ரூ500; ரூ1,000 நோட்டுகள் செல்லாது.

- ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள 50 நாட்கள் அவகாசம்

- நவ.10 முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை ரூ500; ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றலாம்.

- அஞ்சலகங்கள், வங்கிகளில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றலாம்

- அரசு மருத்துவமனை, பெட்ரோல் பங்குகளில் நவ. 11-ந் தேதி வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லும்

- ரூ500, ரூ2,000 புதிய வகை நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

- டிசம்பர் 30-க்குள் தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-க்குள் மாற்றலாம்

- நாடு முழுவதும் வங்கிகள் நாளை மூடப்படும்.

- வங்கி, அஞ்சலகங்களில் எந்த பணபரிவர்த்தனையும் நடைபெறாது.

- நாளையும் நாளை மறுநாளும் நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படும்.

- விமான நிலையம், ரயில் டிக்கெட், மருந்தகங்களில் ரூ500, ரூ1,000 தற்காலிகமாக செல்லும்

- சர்வதேச விமான நிலையங்களில் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

- மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.- நவம்பர் 10-ந் தேதி முதல் புதிய ரூ500, ரூ1,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும்.

- பணத்தை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் அவசியம்- மாநில அரசின் பால் விற்பனை நிலையங்களிலும் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லும்.

- இடுகாடுகள், மயானனங்களிலும் நவம். 11-ந் தேதி வரை வரை ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லும்

- தொடக்கத்தில் நாளொன்றுக்கு ரூ10,000, வாரத்துக்கு ரூ20,000 மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். பின்னர் இந்த தொகை அதிகரிக்கப்படும்.

- ரூ500, ரூ1000 நோட்டுகளை ரூ4,000 வரை எந்த ஒரு வங்கி மற்றும் அஞ்சலகத்திலும் உரிய அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக் கொள்ள முடியும். இந்த ரூ4,000 அளவுக்குதான் மாற்றலாம் என்கிற கட்டுப்பாடு நவம்பர் 24-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

- டிசம்பர் 30-ந் தேதிக்கு பின்னர் ரூ500, ரூ1000 நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் மாற்றிக் கொள்ளலாம்

- செக், டிடி, டெபிட், கிரெட்டிட் கார்ட் பணபரிவர்த்தனைகளில் கட்டுப்பாடு எதுவும் இல்லை

இவ்வாறு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

English summary
Currency notes of Rs 500 and Rs 1,000 have been pulled off circulation and this will be in effect from midnight today. This announcement was made by the Prime Minister of India, Narendra Modi today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X