சபரிமலை மகரவிளக்கு, மண்டல பூஜை - நவ 15ல் ஐயப்பன் கோவில் திறப்பு - கொரோனா சான்றிதழ் அவசியம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ஆம்தேதி மாலை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ஆம்தேதி மாலை திறக்கப்பட உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணைவதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.
ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

பிரம்மச்சரிய கடவுள்
பிரம்மச்சரிய தெய்வமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலைக்கு, நாடு முழுவதும் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கடும் விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டும், சிலர் விரதம் மட்டும் இருந்து ஐயப்பனை மனம் குளிர கண்டு தரிசிக்க வருவதுண்டு. அதிலும் குறிப்பாக தமிழ் மாதம் முதல் நாளன்றும், மண்டல பூஜை காலங்களிலும் மகர விளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்தை காணவும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவதுண்டு.

மாலை அணிந்து விரதம்
இந்த வழக்கமான நடைமுறைகளெல்லாம் இந்த ஆண்டு காணாமல் போய்விட்டது என்றே சொல்லலாம். காரணம், கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய் தொற்றின் காரணமாக, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கூட வழக்கமாக ஆண்டு தோறும் மாலையணிந்து விரதமிருக்கும் பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் எப்படியும் நமக்கு வழிகாட்டுவார் என்று நம்பிக்கையோடு, இந்த ஆண்டும் மாலையணிந்து விரதமிருந்து வருகிறார்கள்.

பக்தர்களுக்க அனுமதி
பொதுவாக மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை மாதந்தோறும் திறக்கப்படும். கடந்த மாதங்களில் அங்கு அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த காரணத்தால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வந்த காரணத்தால் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்களுக்கு சபரிமலை செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது.

கோவில் நடை திறப்பு
சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 2ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் 17ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவு தரிசனம்
நவம்பர் 16ம் தேதி முதல் தினமும் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சபரிமலை யாத்திரைக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஐயப்பன் கோயில் மற்றும் அதன் வளாகத்தில் தயாராக உள்ளன. கொரோனா பரவல் இல்லாத, பாதுகாப்பான தரிசனத்தை பக்தர்களுக்கு உறுதிசெய்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு அனுமதி
கடந்த ஆண்டு ஆண்டு பம்பா நதியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பம்பை நதியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு, நதிக்கரையிலேயே ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, பம்பா நதியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் நடந்து சபரிமலை செல்லவும் அனுமதி இல்லை. கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்தில் பம்பா செல்ல வேண்டும்.

நெய் அபிஷேகம் அனுமதி
இந்த ஆண்டு 10 வயதுக்கு கீழும், 65 வயதுக்கு மேலும் உள்ள பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்நிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்
பம்பை மற்றும் எருமேலியில் மருத்துவ வசதிகள், ஆர்டி-பிசிஆர் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டாயமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அளித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications