நபிகள் நாயகம் ஒரு சிறந்த யோகி, நான் ஒரு உண்மையான முஸ்லீம்: சாக்ஷி மகராஜ் குசும்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தான் ஒரு உண்மையான முஸ்லீம் என்றும், நபிகள் நாயகம் யோகா செய்ததாகவும் தெரிவித்துள்ளார் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்.
பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜுக்கு ஏதாவது சர்ச்சையை கிளப்புவதே வேலையாகிவிட்டது. முன்னதாக அவர் இந்து மதத்தை காப்பாற்ற இந்து பெண்கள் கண்டிப்பாக 4 குழந்தைகள் பெற வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில் அவர் தற்போது யோகா பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இஸ்லாத்தில் முகமது தான் பெரிய பெயர். முகமது சாப் பெரிய யோகி என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு உண்மையான முஸ்லீம் என்றார்.
முன்னதாக அவர் ராமர் கோவில் கட்டுவது பற்றி கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. என்ன நடந்தாலும் கோவில் கட்டப்படும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications