நீட் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் மதிப்பெண் அடிப்படையில் வரும் 17ம் தேதி நடக்க இருக்கும் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என சங்கல்ப் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. நீட் தேர்வில் பீகார் உள்பட பல இடங்களில் தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்கள் வெளியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல, ஒவ்வொரு இடங்களிலும் வினாத்தாள்கள் வெவ்வேறாக இருந்தது. இது அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிரானது.

SC refuses to stay the NEET medical counselling

இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கும் செயல். எனவே, தற்போது நடைபெற்ற நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்பது மனுதாரர் கோரிக்கை.

ஆனால், உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மாணவர் கவுசலிங், மாணவர் சேர்க்கைக்கு தடை இல்லை என்று அறிவித்துள்ளது. தடை வித்தால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் என்றும், இந்த விஷயத்தில், சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். ஜூலை 17ம் தேதி முதல் மருத்துவவ கவுன்சிலிங் தொடங்க உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் தேர்வானவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SC refuses to stay the NEET medical counselling scheduled from July 17, says 6.11 lac students have cleared the exam.
Please Wait while comments are loading...