கர்நாடகாவில் கம்பலா போட்டிக்கு தடையில்லை... சுப்ரீம்கோர்ட் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜல்லிக்கட்டு போல கம்பலா போட்டிக்கும் தடையில்லை...வீடியோ

  டெல்லி: கர்நாடக மாநிலத்தில் மாடுகளை வைத்து நடத்தப்படும் கம்பலா போட்டிக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பீட்டா அமைப்பு கம்பலாவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

  தமிழகத்தில் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போல கர்நாடகத்திலும் எருது விடும் விழா கம்பலா என்ற பெயரில் நடத்தப்படுகிறது. மங்களூருவின் கடலோர மாவட்ட மக்களின் பாரம்பரிய விளையாட்டான சேற்றில் எருது விடும் கம்பலாவுக்கு தடைவிதிக்க கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

  SC rejects to impose ban on Kambala sport

  இதனால் பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் கம்பலா போட்டியை அனுமதிக்க வலியுறுத்தியும் கர்நாடகாவில் பல வித போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கம்பலா போட்டிகளை நடத்த அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்றார். மேலும் கம்பலா விளையாட்டை அனுமதிக்கம் வகையில் சட்டத்திருத்தம் செய்யவும் அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டது.

  இந்நிலையில் பீட்டா கம்பலா போட்டிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஆண்டு கம்பலா போட்டிக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Supreme court rejects to impose ban on Kambala this year a traditionla sport of Karnataka as PETA seeks ban for this sport like Jallikattu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற