தனி மனித சுதந்திரத்தை பறிக்கிறதா ஆதார்? 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆதார் அட்டையால் தனிமனித சுந்திரத்திற்கு பங்கம் ஏற்படுகிறதா என்பதை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால், வாதிடுகையில், ஏற்கனவே 8 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இதுபோன்ற வழக்கை விசாரித்து, தனிமனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையில்லை என கூறிவிட்டதாக தெரிவித்தார்.

SC sets up 5 judge Bench to decide if Aadhaar violated right to privacy

ஆனால், கோர்ட் இதை ஏற்கவில்லை. ஜூலை 18ம் தேதி முதல் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வாக இதை விரிவாக்கம் செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கைரேகை, கருவிழி ரேகை போன்றவற்றை எடுப்பது தனி மனித சுதந்திரத்திற்க்கு எதிரானது என்று குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court has decided to set up a 5 judge Bench to decide on whether Aadhaar violated right to privacy. A batch of petitions have been filed in the Supreme Court challenging the decision to make Aadhaar mandatory. The petitioners contended that it amounted to violation of the provisions under right to privacy. The petitioners had alleged that collection of personal details like finger prints and iris scan violated the right to privacy.
Please Wait while comments are loading...